இன்றைய காலகட்டத்தில் திருமண உறவுகள் முறிந்து போவதற்கு பெரும்பாலும் அந்த உறவுக்கான நேரம் கிடைக்காததே காரணமாக அமைகிறது. குறிப்பாக ஐடி துறையில் வேலையும் தம்பதிகளில் ஒருவர் காலை வேலைக்கு போய்விட்டு இரவு வரும் நேரம் மற்றொருவர் வேலைக்கு கிளம்புவார். இப்படி போனால் எப்படி பேசுவது, திருமண பந்தம் உறுதியாவது? எல்லாம் விவகாரத்தில் தான் போய் நிற்கிறது.
அப்படி ஒரு வழக்கு தான் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயர்களாக வேலை செய்து வரும் ஒரு தம்பதியரின் விவாகரத்து கேட்டு போட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி. நாகரத்தினா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துள்ளது.
அப்போது தான் ஒருவருக்கு காலையும் மற்றொருவருக்கு இரவு வேலை என்பதை கூறியுள்ளனர். இதை கேட்ட நீதிபதிகள், “சாப்ட்வேர் என்ஜினியர்களாக இருக்கிறீர்கள். ஒருவருக்கு பகலிலும், மற்றவருக்கு இரவிலும் வேலை;திருமண உறவுக்கு நேரம் எங்கே இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
விவகாரத்தால் உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் திருமண பந்தத்திற்கு வருத்தம் ஏற்படும் அல்லவா? நீங்கள் திருமண பந்தத்துக்கு மற்றொரு வாய்ப்பு தரக்கூடாதா? என்று தம்பதிகளை கேட்டுள்ளனர். தங்கள் உறவுகளை முறித்துக்கொள்ளாமல் நேரம் ஒதுக்க செய்ய நீதிபதிகள் கேட்டபோதிலும் தம்பதிகள் மறுத்துவிட்டனர்.
இதையும் படிங்க; “Farewell கொடுக்க வந்திருக்காங்க...” - சிஎஸ்கே சீருடையில் குவிந்த கொல்கத்தா ரசிகர்கள்... ஓய்வு குறித்து தோனி மீண்டும் சூசகம்..!
தம்பதியின் வழக்குரைஞர், இருவரும் விவாகரத்துக்கு சம்மதித்து, ஒப்பந்தம் செய்து கொண்டு இந்து திருமண சட்டம் பிரிவு ‘13-பி'யின்படி பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளனர். அதேபோல மனைவிக்கு ஒரே நேரத்தில் ரூ.12 1/2 வட்சம் ஜீவனாம்சம் தந்து தீர்த்து விட கணவர் ஒப்புக் கொண்டு விட்டார் எனவும் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்துநீதிபதிகள் தங்கள் தீர்ப்பை வழங்கினர். அதில், இந்த வழக்கில் இரு தரப்பு தீர்வு ஒப்பந்தத்தையும், அரசியல் சாசனம் பிரிவு 142-படி, தாக்கல் செய்துள்ள மனுவையும் பரிசீலனை செய்து தீர்வு ஒப்பந்தங்களின் விதிமுறைகள் சட்டப்பூர்வமானது; ஏற்றுக்கொள்வதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை..
எனவே இந்தச் சூழ்நிலையில். நாங்கள் அரசியல் சாசனம் பிரிவு 142 வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 1955-ம் ஆண்டு இந்து திருமணச் சட்டம் பிரிவு ‘13-பி' யின் கீழ் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து உத்தரவு பிறப்பிக்கிறோம் என்று விவகாரத்து வழங்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Divorce, Marriage, Supreme court