முகப்பு /செய்தி /இந்தியா / ”கிரிக்கெட் பார்க்க இந்தியா வாங்க...”- பிரதமர் மோடி ஆஸ்திரேலிய பிரதமருக்கு அழைப்பு...

”கிரிக்கெட் பார்க்க இந்தியா வாங்க...”- பிரதமர் மோடி ஆஸ்திரேலிய பிரதமருக்கு அழைப்பு...

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உறவு என்பது ‛டி20' கிரிக்கெட் போட்டி போல் அடுத்த கட்டத்திற்கு சென்று உள்ளது என்று சிட்னியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை பார்க்க வருமாறு, ஆஸ்திரேலியர்களுக்கும், அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பனீஸுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமருக்கு, சிட்னியில் அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இரு நாட்டு பிரதமர்கள் தலைமையில் இருதரப்பு பேச்சு நடைபெற்றது. இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், இரு நாட்டு வணிகம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

சுரங்கம் மற்றும் பல்வேறு கனிமங்கள் துறையில் ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தொடர்பாக பணிக்குழு அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஆஸ்திரேலியாவில் கோயில்கள் மீது நடந்த தாக்குதல்கள் குறித்து ஆலோசித்ததாக கூறிய பிரதமர் மோடி, பிரிவினைவாத அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் உறுதியளித்ததாக கூறினார்.

மேலும் படிக்க... 2G Case Update | ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்தது அப்பட்டமான சட்ட விதிமீறல்... சிபிஐ வாதம்...!

இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளைக் காண வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு மோடி அழைப்பு விடுத்தார். தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர், பெங்களூருவில் ஆஸ்திரேலிய துணை தூதரகம் அமைய இருப்பதாக அறிவித்தார்.

பின்னர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸும் புகழ்பெற்ற ஓபரா இல்லம் முன்பு நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்

First published:

Tags: Australia, PM Modi