தன்னுடைய 16 வயதில் பானுசிங்கோ என்ற புனைப் பெயரில் முதல் கவிதையை வெளியிட்ட கவிஞர் தான் ரவீந்திரநாத் தாகூர். 20 வயதில் வால்மீகி பிரபிதா என்ற நாடகத்தை எழுதியதோடு, 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை எழுதி புகழ் பெற்றார். குறிப்பாக தேசிய பாடலான ‘ஜன கண மன’ பாடலை இயற்றியது, காந்தியை முதல் முதலாக மகாத்மா என்று அழைத்தது உள்ளிட்ட பெருமையும் ரவீந்திரநாத் தாகூருக்கு உள்ளது.
இப்படி பல இலக்கிய படைப்புகளை உலகறிய செய்த கவிஞரின் 167-வது பிறந்த நாள் கடந்த மே 7-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இது போன்று ஒவ்வொரு கலைஞரின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டாலும் இவர்களை இன்றைய இளைஞர்கள் நினைவில் வைத்துள்ளார்களா என்பது கேள்விக்குறி தான்.ஆம், முன்பெல்லாம் நம்முடைய முன்னோர்களிடம் எவ்வித டிஜிட்டல் வளர்ச்சியும் இல்லை என்பதால், புத்தகங்கள் தான் அவர்களின் நண்பனாக இருந்தது. இதோடு மட்டுமின்றி டேப் ரெக்கார்டர்கள் தான் அவர்களின் உலகமாக இருந்தது. இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இதனால் தான் இன்றைக்கு இளைஞர்களில் பெரும்பாலோனார் புத்தகங்களை வாசிப்பதையே நிறுத்திவிட்டதாக வேதனை அடைகின்றனர் புத்தக பிரியர்கள்.
குறிப்பாக ரவீந்திரநாத்தின் 167-வது பிறந்த தினத்தை வெறும் பேருக்காக மட்டுமே கொண்டாடுகிறோம். ஆனால் இந்த டிஜிட்டல் யுகத்தில், பழம்பெரும் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளுடன் இளைஞர்கள் தொடர்பை இழக்க கூடும் என்ற கவலைகள் அதிகரித்து வருகின்றன. அலைபேசி மற்றும் சமூக வலைதளப் பயன்பாடு அதிகரித்து வருவதால், புத்தகங்களைப் படிக்கும் போதையும், கவிஞரின் பாடல்களைப் பற்றி விவாதிக்கும் பழக்கமும் மறைந்து வருவதாகத் தெரிகிறது. இளைஞர்கள் மத்தியில் ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகள் மீதான ஆர்வம் குறைந்து வருவதற்கு டிஜிட்டல்மயமாக்கல் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
Read More : 2000 ரூபாய் கொடுத்ததால் போட்ட பெட்ரோலை உறிஞ்சி எடுத்த பங்க் ஊழியர்..
மேலும் ரவீந்திர ஜெயந்தி ஜங்கல்மஹால், பாஸ்சிம் மேதினிபூர் ஆகிய இடங்களில் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆனாலும் இந்த ஆண்டு முழுவதும் தாகூரின் பணிகள் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டதாக சிலர் கவலைப்படுகிறார்கள். இதுக்குறித்து புத்தக விற்பனையாளர் கவுதம் சர்க்கார் கூறும்போது, “தற்போது தேவை குறைவாக இருந்தாலும், ரவீந்திரநாத்தை மையப்படுத்திய பாடல்கள் அல்லது கதைப் புத்தகங்கள் வாங்குவதற்கான தேவை குறைந்துள்ளது.
இன்றைய சமூகத்தில் டிஜிட்டல் மாற்றம்தான் முக்கிய காரணம் என்பதோடு முக்கிய பிரச்சனையாகவும் மாறிவருகிறது என்கிறார். இருப்பினும், மக்கள் தாகூரின் பணியை டிஜிட்டல் முறையில் அணுகுகிறார்களா? அல்லது பாரம்பரிய வழிமுறைகள் மூலம் அணுகுகிறார்களா, என்பதைப் பொருட்படுத்தாமல், அதை அறிந்து பாராட்டுவது முக்கியம் என்று சிலர் வாதிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.