முகப்பு /செய்தி /இந்தியா / 30 ஆண்டுகள்... 700 வழக்குகள்... வட மாநிலங்களை அதிரவைத்த திருடன் - 500 கி.மீ சேஸ் செய்து கைது செய்த போலீஸ்..!

30 ஆண்டுகள்... 700 வழக்குகள்... வட மாநிலங்களை அதிரவைத்த திருடன் - 500 கி.மீ சேஸ் செய்து கைது செய்த போலீஸ்..!

பிடிப்பட்ட திருடன் தேவேந்திர சிங்

பிடிப்பட்ட திருடன் தேவேந்திர சிங்

Devendra Singh Arrest | நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய சூப்பர் திருடனை சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று டெல்லி போலீசார் கைது செய்தனர்.

  • Last Updated :
  • Delhi, India

ஏதாவது ஒரு துறையில் சாதித்தவர்களை மையமாக கொண்டும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கருவாக கொண்டும் ஏராளமான படங்களை, திரையுலகம் கண்டுள்ளது. ஆனால் ஒரு திருடனை ரோல் மாடலாக கொண்டு 2008 ஆம் ஆண்டு பாலிவுட்டில் oye lucky lucky oye என்று ஒரு திரைப்படம் வெளியானது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஒரு படமே எடுக்கும் அளவுக்கு, கடந்த 30 ஆண்டுகளாக வட மாநிலங்களில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதுடன் போலீசுக்கு போக்குகாட்டி வந்த அந்த திருடன் பெயர் தேவேந்தர் சிங்.

தனது 14 வயதில் திருட்டு தொழிலை தொடங்கியவர் உத்தரப்பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த இந்த தேவேந்தர் சிங். 1993 ஆம் ஆண்டு முதல் நாட்டின் பல்வேறு இடங்களில் இவர் மீது 700க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பெரும் பணக்காரர்கள், ஆடம்பர வாழ்க்கை வாழ்வோர் தான் தேவேந்தர் சிங்கின் முதல் இலக்கு. அவர்களிடம் இருந்து விலையுயர்ந்த பொருட்கள், கார்களை திருடுவது வழக்கம். சொத்து வாங்குவது சேர்ப்பது என்பது போன்ற ஆசைகள் எல்லாம் தேவேந்தருக்கு கிடையாதாம். 5 நட்சத்திர ஹோட்டல்களில் அதிக கட்டணம் கொடுத்து சொகுசாக தங்கி நேரத்தை கழிப்பது மட்டும் தான் மிகப்பெரிய பலவீனமாம்.

சண்டிகர், சென்னை, டெல்லி என இதற்கு முன்பு பலமுறை சிக்கி இருந்தாலும், கைவிலங்கை திறந்து அவர்களிடம் இருந்து லாவகமாக தப்பிப்பது தான் தேவேந்தரின் பலம் என்கின்றனர் போலீசார். 2010 ஆம் ஆண்டு நடந்த பிரபல பிக்பாஸ் ஷோவில் பங்கேற்பாளராக பிரபலமடைந்த தேவேந்தர், சல்மான் கானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பாதியில் வெளியேற்றப்பட்டார்.

இதையும் படிங்க: பிரபல தாதா சுட்டுக் கொலை... செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது கும்பல் வெறிச்செயல்... உ.பியில் பயங்கரம்!

இப்படி அவ்வப்போது பேசுப்பொருளாகி வந்த தேவேந்தருக்கு முதல் சறுக்கலை ஏற்படுத்தியது, கேரளாவில் அடுத்தடுத்து அரங்கேற்றிய திருட்டுகள். திருவனந்தபுரத்தில் தொழிலதிபர் வேணுகோபாலன் நாயரின் உயர் பாதுகாப்பு வீட்டிற்குள் புகுந்து திருட்டிய நிலையில், ஆங்காங்கே விட்டு சென்ற தடயங்களை அடிப்படையாக கொண்டு புனேவில் தேவேந்தரை கேரள போலீசார் கைது செய்தனர்.

top videos

    சிறையில் இருந்து வெளியே வந்தவர், மீண்டும் டெல்லியில் உள்ள 2 வீடுகளில் கைவரிசை காட்டிய நிலையில், அவர் திருடிச் சென்ற காரின் பதிவெண்ணை கொண்டும் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் பயன்படுத்தியதை கண்காணித்தும் சுமார் 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு போலீசார் துரத்தி சென்றனர். நேபாளம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த அந்த காரை மடக்கி பிடித்து கண்ணாடியை உடைத்து தேவேந்தரை கைது செய்துள்ளனர். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கு எடுத்துக்காட்டாய், போலீசாருக்கு போக்கு காட்டி வந்த 53 வயது பலே திருடன், வசமாய் போலீசிடம் சிக்கியது, oye lucky lucky oye பார்ட் 2வுக்கான சூப்பர் கதையாகி உள்ளது.

    First published:

    Tags: Delhi