டெல்லி: நாட்டின் பல பகுதிகளில் தற்போது வெப்ப அலை வீசிவரும் நிலையில், தலைநகர் டெல்லியிலும் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்த வெப்பம் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் வறண்ட வானிலை உண்டாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த மே மாதம் இறுதியில், டெல்லியின் நஜாஃப்கர் பகுதியில் முதன்முறையாக 115 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. நரேலா மற்றும் பிதாம்புரா பகுதியில் 113 ஃபாரன்ஹீட்டும், அயநகர் பகுதியில் 111 ஃபாரன்ஹீட்டும் பதிவானது. 109.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையே அதிகபட்சமாக இருந்த நிலையில், முதல் முறையாக 115.34 ஃபாரன்ஹீட் பதிவானதால் டெல்லி மக்களுக்கு வானிலை மையம் மூலம் வெப்ப அலை எச்சரிக்கை விடப்பட்டது. அதேபோல், தமிழ்நாட்டிலும் சில பகுதிகளில் கோடை மழை பெய்தாலும், சென்னை போன்ற பல நகரங்களில் வெப்ப அலை வாட்டி வருகிறது.
இதற்கிடையே, கேரளாவில் பருவமழை தொடங்குவதில் நான்கு நாட்கள் தாமதமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்திருந்தது. இருப்பினும், அரபிக்கடலில் ஏற்பட்ட சூறாவளி அதை மேலும் தாமதப்படுத்தியதால், கேரளாவில் ஜூன் 8ஆம் தேதிதான் பருவமழை தொடங்கியது.
டெல்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தர்ஜங் ஆய்வகம் வெளியிட்ட தரவுகளின்படி, டெல்லியில் சில நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ்-ஆக இருக்கும், மேலும், பகலில் பலத்த காற்று வீசுக்கூடும் எனவும் இரவில் மிக லேசான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. லேசான மழை இருந்தாலும், அதன்பின் சில தினங்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் எனவும் கூறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.