முகப்பு /செய்தி /இந்தியா / கொசுவர்த்தி புகையால் நேர்ந்த விபரீதம்... தூக்கத்திலேயே பிரிந்த 6 உயிர்கள்... டெல்லியில் சோகம்..!

கொசுவர்த்தி புகையால் நேர்ந்த விபரீதம்... தூக்கத்திலேயே பிரிந்த 6 உயிர்கள்... டெல்லியில் சோகம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Delhi Death | வீட்டில் இரவு கொளுத்தி வைக்கப்பட்ட கொசுவர்த்தி தவறி மெத்தையில் விழுந்து தீப்பற்றியதில் அதிகப்படியாக புகை எழுந்துள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் கொசுவர்த்தி சுருளில் இருந்து எழுந்த புகையை சுவாசித்ததால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் மச்னி மார்க்கெட் அருகே, ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக சாஸ்திரி பார்க் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வீட்டில் மயங்கிக் கிடந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

top videos

    மேலும் 15 வயது சிறுமிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இரவில் கொசுவர்த்தி சுருளை கொளுத்தி வைத்துவிட்டு உறங்கியதும், அது தவறி விழுந்து மெத்தையில் தீப்பற்றியதும் தெரியவந்துள்ளது. மேலும், அறையின் கதவு அடைக்கப்பட்டிருந்ததால், அறையை சூழ்ந்த அதிகப்படியான கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் மயங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

    First published:

    Tags: Death, Delhi, Mosquito