கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 30 வயதை தாண்டிய பெண் ஒருவர் ஏர்லைன் நிறுவனம் ஒன்றில் விமான உதவி பணியாளராக வேலை செய்து வருகிறார். திருமணமாகி விவகாரத்தான இந்த பெண் மறு திருமணம் செய்து கொள்வதற்காக மேட்ரிமோனி தளத்தில் பதிவு செய்துள்ளார். இவரிடம் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி அன்ஷுல் ஜெயின் என்ற நபர் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.
பெண்ணின் ப்ரோபைல் பிடித்து போனதாகவும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னை தொழிலதிபர் என்று அறிமுகம் செய்து கொண்ட அவர் டெல்லியை அடுத்து உள்ள குருகிராம் பகுதியில் வசிப்பதாக தெரிவித்துள்ளார். அவருடன் பெண் வாட்ஸ் ஆப் மூலம் பேசி பழகி பின்னர் திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மே 7ஆம் தேதி அன்று டெல்லியில் உறவினர் திருமணம் நடைபெறுவதாக கூறி பெண்ணையும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைத்துள்ளார். தனது பெற்றோரை பார்க்க ஏற்பாடு செய்கிறேன். சிறப்பான உடைகள், நகைகள் ஆகியவற்றை எடுத்துவா என்று கூறியுள்ளார்.
அவரின் பேச்சை நம்பி இந்த பெண்ணும் டெல்லிக்கு விமானத்தில் சென்றுள்ளார். விமான நிலையம் வந்து இறங்கிய பெண்ணை அன்ஷுல் காரில் வந்து பிக் செய்து கொண்டார்.
அந்த பெண் தனது பொருள்களை காரில் வைத்து புறப்பட்ட நிலையில், சிறிது துரம் சென்றவுடன் காரை திடீரென நிறுத்தியுள்ளார்.
கார் டையர் பஞ்சர் ஆகியிருக்கிறது போல இறங்கி பார் என்று பெண்ணிடம் கூறியுள்ளார். பெண்ணும் அதை நம்பி காரை விட்டு இறங்கவே, சடாரென கதவை மூடி காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். நடு சாலையில் அதிர்ச்சியில் உறைந்து நின்ற அந்த பெண், பின் டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். பெண்ணின் நகைகள் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருளை அன்ஷுல் திருடி சென்றதாக புகாரில் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து செல்போன் ஆதாரங்கள் ஆகியவற்றை திரட்டி மோசடி ஆசாமியின் இருப்பிடத்தை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியது.
இதையும் படிங்க: எல்லையில் போதைப்பொருளுடன் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்... சுட்டு வீழ்த்திய ராணுவம்- 3 கிலோ ஹெராயின் பறிமுதல்
அதன்படி, கோவாவில் மறைந்திருந்த அவரை காவல்துறை விரட்டி பிடித்து கைது செய்தது. அவரிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன. விசாரணையில், கைது செய்யப்பட்ட அன்ஷுல் ஜெயின் பிரிட்டனில் எம்பிஏ பட்டம் பெற்றவர் என்றும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி இது போன்ற மோசடி கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Scam