முகப்பு /செய்தி /இந்தியா / தலைநகரில் தகிக்கும் வெயில்... 115 டிகிரியை கடந்தது... வெப்ப அலை எச்சரிக்கை..

தலைநகரில் தகிக்கும் வெயில்... 115 டிகிரியை கடந்தது... வெப்ப அலை எச்சரிக்கை..

வெப்பக்காற்று வீச்சு

வெப்பக்காற்று வீச்சு

Heat Wave | 109.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையே அதிகபட்சமாக இருந்த நிலையில், முதல் முறையாக 115.34 ஃபாரன்ஹீட் பதிவாகி உள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

தலைநகர் டெல்லியில், 115 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி உள்ளதால், இன்று வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக, நேற்று முன்தினம் சராசரியாக 104 புள்ளி ஏழு இரண்டு டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

இந்நிலையில், நேற்று, நான்கு இடங்களில் 110 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்து வெப்பம் பதிவானது. நஜாஃப்கர் பகுதியில் முதன்முறையாக 115 ஃபாரன்ஹீட் பதிவானது.

நரேலா மற்றும் பிதாம்புரா பகுதியில் 113 ஃபாரன்ஹீட்டும், அயநகர் பகுதியில் 111 ஃபாரன்ஹீட்டும் பதிவாகி உள்ளது. 109.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையே அதிகபட்சமாக இருந்த நிலையில், முதல் முறையாக 115.34 ஃபாரன்ஹீட் பதிவாகி உள்ளதால், வானிலை ஆய்வு மையம், டெல்லி மக்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க; குஜராத்திடம் பெங்களூரு அணி தோல்வி… ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ்

top videos

    இதேபோல தமிழ்நாட்டின் பல இடங்களிலும் நேற்று வெயில் கொளுத்தி எடுத்தது. பல மாவட்டங்களில் 100 டிகிரியைக் கடந்து வெப்பம் பதிவானது. இதனால் விடுமுறை நாளான நேற்று மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

    First published:

    Tags: Heat Wave