முகப்பு /செய்தி /இந்தியா / மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு!

மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு!

மணிஷ் சிசோடியா

மணிஷ் சிசோடியா

Manish sisodia | மணிஷ் சிசோடியாவின் ஜாமின் மனு மார்ச் 21 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவின் நீதிமன்றம காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை கடந்த 26 ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. இவ்வழக்கில் திஹார் சிறையில் இருந்த மணிஷ் சிசோடியாவை பணபரிமாற்ற மோசடி வழக்கில் அமலாக்கத்துறையும் கைது செய்தது.அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மணிஷ் சிசோடியாவின் காவல், 22 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

top videos

    இந்நிலையில் டெல்லியில் உள்ள ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில், மணிஷ் சிசோடியாவை அமலாக்கத்துறையினர் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தினர்.இதில், சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மணிஷ் சிசோடியாவின் ஜாமின் மனு மார்ச் 21 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Aam Aadmi Party, Delhi