முகப்பு /செய்தி /இந்தியா / தமிழ்நாடு வழியில் டெல்லி அரசும் தீர்மானம் - ஆளுநர் விவகாரம் தொடர்பாக ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் கடிதம்

தமிழ்நாடு வழியில் டெல்லி அரசும் தீர்மானம் - ஆளுநர் விவகாரம் தொடர்பாக ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் கடிதம்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் கடிதம்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் கடிதம்

விரைவில் டெல்லி சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு போல ஆளுநர் விவாகரம் தொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றவுள்ளேன் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Delhi, India

தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்வதை கண்டித்து ஏப்ரல் 10ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். மேலும், ஆளுநர்களின் செயல்பாடு குறித்து பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், ஆளுநர் விவகாரம் தொடர்பாக டெல்லி முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்நாட்டை போலவே டெல்லி துணை ஆளுநருக்கு எதிராக தமது அரசும் விரைவில் தீர்மானம் நிறைவேற்றும் என்றுள்ளார்.

கெஜ்ரிவால் தனது கடிதத்தில் கூறியதாவது, "இந்திய ஜனநாயகம் ஒவ்வொரு நாளும் பெரும் அச்சுறுத்தலை சந்திக்கிறது. அனைத்து அதிகாரங்களையும் முறையின்றி மத்தியில் குவிக்க சக்திகள் செயலாற்றி வருகின்றன. கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிராக மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் செயல்படுகின்றனர். பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களில் அரசு மசோதாத்களை ஆளுநர்கள் காலவரையன்றி கிடப்பில் போடுகின்றனர்.

இதில் அதிகபட்சமாக டெல்லி துணை நிலை ஆளுநரோ மாநில அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிற்கு கூட ஒப்புதல் தராமல் தடுத்து நிறுத்தினார். கல்வி, சுகாராதரம், குடிநீர், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் எங்கள் அரசு செயல்பட விடாமல் ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார். இது போன்ற பனிப்போரை ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு மாநில அரசு மீது தொடுக்கிறது.

எனவே, இதற்கு எதிராக ஒற்றைக் குரலில் நாம் ஒலிக்க வேண்டிய காலம் இது. இந்தியா சட்டத்தால் ஆட்சி நடத்தப்படும் நாடு. மத்திய அரசு அதன் பிரதிநிதிகளின் சாசனத்தால் ஆளும் நாடு அல்ல என்பதை நாம் உணர்த்த வேண்டும்.

இதையும் படிங்க: மொழி ஒரு தடையாக இருக்காது... 13 மொழிகளில் சி.ஏ.பி.எஃப் தேர்வு நடத்துவது பற்றி பிரதமர் மோடி பெருமிதம்

எனவே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நான் வரவேற்கிறேன். நானும் விரைவில் டெல்லி சட்டப்பேரவையில் இது போன்ற தீர்மானத்தை நிறைவேற்றவுள்ளேன். உங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்" என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Aam Aadmi Party, Arvind Kejriwal, CM MK Stalin, Governor