டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது. மதுபான கூடங்களை தனியாருக்கு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் முன்னாள் துணை முதலமைச்சரான ஆம் ஆத்மியின் மணிஷ் சிசோடியா தீவிர விசாரணை வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். அவரது வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதன் நீட்சியாக மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்த வழக்கின் விசாரணை வலையத்தில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகராவ் மகள் கவிதாவும் உள்ளார். இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த வழக்கு விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளார். மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜாரக வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ஊழலின் பிரதான மூளையாக இருந்தவர் கெஜ்ரிவால் தான் என பாஜக குற்றம் சாட்டி வரும் நிலையில், இதற்கு கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். சிபிஐ சம்மன் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அப்போது அவர், "என்னை கைது செய்ய வேண்டும் என பாஜக சிபிஐக்கு உத்தரவு தந்தால் அதை அவர்கள் நிறைவேற்றுவார்கள். மக்களுக்கு ஆம் ஆத்மி நம்பிக்கை ஒளி தந்தது. அதை மறைய வைக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். தங்களுக்கு டார்ச்சர் கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் சிபிஐ, அமலாக்கத்துறை இது போன்று செயல்படுகின்றனர்.
நாள்தோறும் யாரையாவது கைது செய்து அவர்களுக்கு டார்ச்சர் தந்து நீதிமன்றத்தில் பொய்களை தெரிவித்து வருகின்றன. இது போன்ற போலி புகார்களை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் மீது வழக்கு தொடுக்கவுள்ளேன். நான் எந்த ஒரு ஆதாரமும் இன்றி பிரதமருக்கு 1,000 கோடி ரூபாய் கொடுத்தேன் என்ரு கூறினால், அதை கேட்டு நீங்கள் பிரதமரை கைது செய்வீர்களா. அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல்வாதி என்றால், உலகில் யாரும் நேர்மையானவர்கள் இல்லை.
இதையும் படிங்க: பாஜகவில் இருந்து விலகல்... காங்கிரஸில் இணைந்த முன்னாள் துணை முதல்வர்... கர்நாடக அரசியலில் பரபரப்பு..!
ஊழல் பணத்தை நாங்கள் கோவா தேர்தலுக்கு பயன்படுத்தினோம் என்று புகார் கூறுகிறார்கள். அதற்கு என்ன ஆதாரம் உள்ளது. அனைத்து பணப்பரிவர்த்தனையும் செக் மூலமாக தரப்படுகிறது. நாங்கள் ஊழலில் சேர்த்ததாக ஒரு பைசா பணத்தை கூட அவர்களால் கைப்பற்ற முடியவில்லை" என்றார். நாளை காலை 11 மணி அளவில் கெஜ்ரிவால் சிபிஐ முன் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.