வாழ்க்கையில் நிலவும் கஷ்டங்களைக் கடந்து தான் நாம் வெற்றி இலக்கை அடைய வேண்டும். ஒரு சிலருக்கு கொஞ்சம் குறைவாகவும், ஒரு சிலருக்கு கஷ்டங்கள் அதிகளவில் இருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் எப்படி கடந்து செல்கிறோம் என்பதோடு நம்முடைய இலக்கை எப்படி அடைகிறோம்? என்பதில் தான் வெற்றி உள்ளது. இதோ இந்த வரிகளுக்கு சொந்தக்காரராக உள்ளார். மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த மாற்றுத்திறனாளி பெண் கன்காபதி. சட்டப்படிப்பில் 100 சதவீத மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளி….
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியைச் சேர்ந்தவர் தான் மாற்றுத்திறனாளி பெண் கன்காபதி. தன்னுடைய 65 வயதான தாயுடன் குடிசை வீட்டில் வசித்து வரும் இவருக்கு, படிக்க வேண்டும் என்ற ஆசை அளப்பரியதாக இருந்துள்ளது. இந்த சூழலில் தான் இவரின் தந்தை உயிரிழந்தயைடுத்து இவர்களது வாழ்க்கைப் போராட்டம் பெரிய சவாலாக அமைந்து விட்டது. வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட வேண்டும் என்பதற்காக, கன்காபதியின் தாயார் நெல் மணிகளை விற்றும், வீட்டு வேலைகளைப் பார்த்து வந்துள்ளார் இவரது தாய் பாகீரதி மாலிக். மேலும் பல கஷ்டங்களுடன் தன்னுடைய கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணாக கன்காபதியை படிக்க வைத்துள்ளார்.
இவர்களின் நிலைமையைக் கண்டு மனிதநேயமுள்ள பலர் கல்விக்காக பல உதவிகளை செய்துள்ளனர். இந்த உதவிகளை ஏற்றுக்கொண்டதோடு, பல சவால்களை சந்தித்து எல்.எல்.பி பட்டப்படிப்பு தேர்வில் 100% மதிப்பெண்கள் பெற்று பலருக்கும் முன் உதாரணமாக உள்ளார். இருப்பினும் முதுகலைப் படிப்பிற்கு பணம் அதிகம் தேவைப்படுகிறது. எல்.எல்.எம் படிப்பில் சேர்வதற்கான கடைசி தேவை ஏப்ரல் 25 என்பதால் கல்லூரி ஆசிரியர்கள் உள்பட பல நல விரும்பிகள் இவர்களுக்கு ஆதரவாக உள்ளனர்.
Read More : மெட்ரோ ரயில் நிலைய லிப்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை... வாலிபர் கைது
மேலும் இந்த சூழலிலும் என்னுடைய குடும்பத்தில் இருந்தோ அல்லது என்னுடைய கணவரின் குடும்பத்தில் இருந்தோ எந்த உதவிகளும் கிடைக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கிறார். மேலும் கானாகுலில் உள்ள கோபால்நகரைச் சேர்ந்த சமூக சேவகர் ஜாசிமுதீன் ஷேக், கன்காபதியின் படிப்பிற்கு நீண்ட காலமாக உதவி செய்து வருவதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில் நீங்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதற்கு உறுதியுடன் இருந்தால் போதும், எந்த தடைகள் வந்தாலும் சுலபமாக இலக்கை அடைய முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக உள்ளார் இந்த மாற்றுத்திறனாளி பெண் கன்காபதி. நிச்சயம் இவரின் படிப்பிற்கு மனித நேயமுள்ள பலரும் உதவ முன் வரவேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.