முகப்பு /செய்தி /இந்தியா / மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டன்

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டன்

Cabinet Meeting | மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீத இருந்த அகவிலைப்படி  42 சதவீதமாக உயர்வு

  • Last Updated :
  • Delhi, India

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். ஏற்கனவே  ஜனவரி 2023யில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் அகவிலைப்படி தற்போது  42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

top videos

    மேலும், வீட்டு உபயோக பயன்பாடுகளுக்கான கேஸ் சிலிண்டருக்கு மானியம் ரூ.200ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டருக்கு மட்டும் மானியம் ரூ.200 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது

    First published:

    Tags: Modi Cabinet