முகப்பு /செய்தி /இந்தியா / நிலத்தகராறு... பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை... மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி..!

நிலத்தகராறு... பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை... மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி..!

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தலித் பெண்

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தலித் பெண்

நில உரிமை தொடர்பான தகராறில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

  • Last Updated :
  • Madhya Pradesh, India

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் பகுதியில் உள்ள கரன்வாஸ் காவல்நிலைய பகுதிக்கு உட்பட்ட நபாலியா கிராமத்தில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் அருகே உள்ள நிலம் ஒன்றை குத்தகைக்கு வாங்கியுள்ளனர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்புக்கும் இடையே சில மாதங்களாகவே தகராறு இருந்துள்ளது.

விவகாரம் நீதிமன்றத்தை அடைந்த நிலையில், எதிர்தரப்பு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தை பழிவாங்க முடிவெடுத்தது. அதன்படி, சம்பவ நாளான கடந்த மே 6ஆம் தேதி இரவு 9 மணி அளவில் அவர்களது வீட்டிற்கு எதிர்தரப்பை சேர்ந்த 8 பேர் அத்துமீறி நுழைந்துள்ளனர். வீட்டில் குடும்பத்தார் சாப்பிட்டுக் கொண்டு இருந்த நிலையில், அவர்களை அந்த கும்பல் சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.

அவர்கள் அணிந்திருந்த பெல்ட்டால் அனைவரையும் சரமாரியாக அடிக்கத் தொடங்கினர். வீட்டில் இளம் பெண் இருந்த நிலையில், அவரின் அடைகளை கிழித்து சித்தரவாதை செய்துள்ளனர். அடிதாங்க முடியாமல் பெண்ணின் தந்தை, சகோதரர் மயங்கி வீழ்ந்த நிலையில், அந்த 8 பேர் கும்பல் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இந்த கொடூர செயலில் அந்த வீட்டின் உறுப்பினர்கள் அனைவரும் மோசமாக பாதிப்பை சந்தித்துள்ளனர். தொடர்ந்து அடுத்த நாள் காலை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையும் படிங்க: பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு தொல்லை கொடுத்த இளைஞர்கள்.. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

அதன்பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. முதல்கட்டமாக, 5 பேரை கைது செய்ததாக கூறிய ராஜ்கர் எஸ்பி வீரேந்திர சிங், மீதமுள்ள நபர்களை தேடிவருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Crime News, Dalit, Madhya pradesh