முகப்பு /செய்தி /இந்தியா / அதி தீவிர புயலாக மாறியது மோக்கா.. மணிக்கு 175 கிமீ வேகத்தில் காற்று வீசும்.. வானிலை அப்டேட்

அதி தீவிர புயலாக மாறியது மோக்கா.. மணிக்கு 175 கிமீ வேகத்தில் காற்று வீசும்.. வானிலை அப்டேட்

மோக்கா புயல்

மோக்கா புயல்

Cyclone Mocha | வங்க கடலில் நிலைகொண்டுள்ள மோக்கா புயல் அதி தீவிர புயலாக மேலும் வலுவடைந்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிர புயலாக மாறியது. இதற்கு 'மோக்கா' என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்த மோக்கா புயல், போர்ட் பிளேயருக்கு வடமேற்கே 550 கிலோமீட்டர் தூரத்திலும், வங்காளதேசத்திற்கு 800 கிலோமீட்டர் தூரத்திலும், மியான்மருக்கு தென்மேற்கே 740 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டிருந்தது.

இது வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்து கிழக்கு மத்திய வங்கக்கடலில் தீவிர சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. நாளை நண்பகல் தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளை மிகக் கடுமையான சூறாவளி புயலாகக் கடக்கக்கூடும் என்றும், அப்போது காற்றின் வேகம் மணிக்கு 160ல் இருந்து 175 கிமீ வேகத்தில் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடக தேர்தல் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

top videos

    இதனிடையே மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் அங்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது. இந்த நிலையில் அதி தீவிர புயலாக மோக்கா புயல் மேலும் வலுவடைந்துள்ளது. போட்ர் பிளேயருக்கு வெடமேற்கே சுமார் 570 கி.மீ.. தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ளது. நாளை வங்கதேசம் மியாண்மர் இடையே கரையை கடக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Bay of Bengal, Cyclone