முகப்பு /செய்தி /இந்தியா / அரபிக் கடலில் உருவானது புயல்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அரபிக் கடலில் உருவானது புயல்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அரபிக் கடலில் உருவான புயலுக்கு பைபோர்ஜாய்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து தென்மேற்கே 1,100 கிமீ தொலைவில், தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)தெரிவித்து இருந்தது. இந்தநிலையில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இந்த சூறாவளிக்கு 'பைபோர்ஜாய்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வங்கதேசம் வழங்கியுள்ள 'பைபோர்ஜாய்' என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும். மேலும் இந்த புயலால் கேரளா முதல் மகாராஷ்டிரா வரையிலான பகுதியின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

First published:

Tags: Cyclone