முகப்பு /செய்தி /இந்தியா / ஐபிஎல் கோப்பையுடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனிடம் வாழ்த்து பெற்ற சிஎஸ்கே அணியினர்

ஐபிஎல் கோப்பையுடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனிடம் வாழ்த்து பெற்ற சிஎஸ்கே அணியினர்

ஐபிஎல் கோப்பையுடன் ஆந்திர முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டி

ஐபிஎல் கோப்பையுடன் ஆந்திர முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், ஐபிஎல் கோப்பையை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனிடம் கொடுத்து வாழ்த்து பெற்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Andhra Pradesh, India

அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், தோனி தலைமையிலான சென்னை அணி, குஜராத்தை வீழ்த்தி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியின் விறுவிறுப்பிலிருந்து ரசிகர்கள் இன்னும் வெளிவரவில்லை.

இதையடுத்து சிஎஸ்கேவின் வெற்றிக் கோப்பை சென்னை எடுத்துவரப்பட்டு, தி நகரில் உள்ள திருமலை - திருப்பதி தேவஸ்தான கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன், அவரது மகள் ரூபா குருநாத் மற்றும் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு ஆகியோர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனை சந்தித்தனர்.

இதையும் படிக்க : அஸ்வினை எடுக்காதது தவறான முடிவா? இந்திய அணியின் வேகப்பந்தை பதம் பார்த்த ஹெட், ஸ்மித்...

விஜயவாடா அருகே முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பில், வெற்றிக்கோப்பையை கொடுத்து ஆசி பெற்றனர். சென்னை அணி மேலும் பல கோப்பைகளை வெல்ல வேண்டும் என ஜெகன்மோகன் வாழ்த்து கூறினார்.

மேலும், ஆந்திராவைச் சேர்ந்தவரான அம்பத்தி ராயுடுவின் அறிவுரையின்பேரில், மாநிலத்தில் பெரிய அளவிலான விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என்றும் ஜெகன்மோகன் உறுதி அளித்தார்.

செய்தியாளர் : புஷ்பராஜ் (திருப்பதி)

First published:

Tags: Ambati rayudu, CSK, JaganMohan Reddy