முகப்பு /செய்தி /இந்தியா / “ரஜினியின் குணத்தை விமர்சிப்பது வானத்தை நோக்கி எச்சில் துப்புவது போன்றது” - சந்திரபாபு நாயுடு கண்டனம்

“ரஜினியின் குணத்தை விமர்சிப்பது வானத்தை நோக்கி எச்சில் துப்புவது போன்றது” - சந்திரபாபு நாயுடு கண்டனம்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

அவதூறு பேசும் ரோஜா போன்ற தலைவர்களை ஜெகன்மோகன் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் - சந்திரபாபு நாயுடு

  • Last Updated :
  • Chennai, India

ஆந்திரா அரசியல் தெரியாமல் அது பற்றி பேசக்கூடாது என்றும் அரசியல் பேசி ஜீரோ ஆனவர் என்றும் ரஜினியை ரோஜா விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சி வரும் ரஜினிகாந்தின், அரசியல் வருகை குறித்த பேச்சும் சர்ச்சையும் 25 ஆண்டுகளாக தலைப்பு செய்திகளாக இருந்து வந்தன. உடல்நிலை கருத்தில் கொண்டு அரசியல் களம் காண போவதில்லை இல்லை என்று 2021 ஆம் ஆண்டு அறிவித்து இதற்கு ரஜினிகாந்த் முற்றுபுள்ளி வைத்தார்.

இந்நிலையில்  மறைந்த பழம்பெரும் நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமாராவின் 100-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் அவரது உரை, அரசியல் சர்ச்சைக்கு மீண்டும் தூபம் போட்டுள்ளது. இப்படி கூட்டத்தை பார்த்தா தனக்கு அரசியல் பேசணும்னு தோணுது என்று கூறிய ரஜினிகாந்த், இந்திய அரசியல் மட்டுமின்றி உலக அரசியலும் சந்திரபாபு நாயுடுவுக்கு தெரியும் என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க:  “ரஜினிகாந்த் ஒரு ஜீரோ..” - அமைச்சர் ரோஜா காட்டமான விமர்சனம்

சந்திர பாபுவின் 2047 தொலை நோக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டால், நாட்டிலேயே ஆந்திரா முதன்மை மாநிலமாக மாறும் என்று ரஜினி கூறியது ஆளும் கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.இதன் தாக்கம், திரைத்துறையிலிருந்து அரசியலுக்குள் நுழைந்து ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள ரோஜா மூலம் வெடித்துள்ளது. புதுவை வில்லியனூர் புஷ்கரணியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரிய நடிகர்களில் பேசி பேசியே ஜீரோ ஆனவர் ரஜினிகாந்த் என்று கடுமையாக விமர்சித்தார்.

சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பவன்கல்யாண், ரஜினிகாந்த் ஆகியோர் தனித்தனியாக வந்தாலும் ஒன்றாக சேர்ந்து வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியை அசைக்க முடியாது என்றும் அவர் கூறினார். இது தொடர்பாக ரஜினிகாந்த் தரப்பில் எந்த எதிர்வினையும் ஆற்றாத நிலையில், ரோஜாவின் விமர்சனங்களுக்கு சந்திரபாபு நாயுடுகண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த தனது டுவிட்டர் பதிவில், ரஜினி மீதான இந்த அநாகரீகமான விமர்சனங்கள் புண்படுத்தும் வகையில் மூர்க்கத்தனமாக உள்ளது என்று கூறினார். சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் ரஜினி போன்ற பழம்பெரும் ஆளுமை குறித்து ஒய்.எஸ்.ஆர்.சி. கட்சியின் கேவலமான கருத்துகள் அனைவரையும் வேதனைக்குள்ளாக்குவதாகவும் சந்திரபாபு தெரிவித்துள்ளார்.

top videos

    YSRC அரசின் போக்கை ரஜினிகாந்த் விமர்சிக்கவில்லை என்றும் யாரையும் அநாகரீமாக பேசவில்லை என்றும் கூறியுள்ள சந்திரபாபு நாயுடு, பல தலைப்புகளில் தனது கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொண்டதாக விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும், அவர் மீது அதீத ஆணவத்துடன் வீண் விமர்சனம் செய்வதை மக்கள் யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் சிகரம் போன்ற ஆளுமை கொண்ட ரஜினியின் குணாதிசயத்தை விமர்சிப்பது வானத்தை நோக்கி எச்சில் துப்புவது போன்றது என்றும் கூறினார். அவதூறு பேசும் ரோஜா போன்ற தலைவர்களை ஜெகன்மோகன் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

    First published:

    Tags: Actress Roja, N Chandrababu Naidu, Rajinikanth, Tamil News