முகப்பு /செய்தி /இந்தியா / பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு தொல்லை கொடுத்த இளைஞர்கள்.. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு தொல்லை கொடுத்த இளைஞர்கள்.. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

நிதீஷ் ராணாவின் மனைவிக்கு தொல்லை கொடுத்த இளைஞர்கள்

நிதீஷ் ராணாவின் மனைவிக்கு தொல்லை கொடுத்த இளைஞர்கள்

கிரிக்கெட் வீரர் நிதீஷ் ராணாவின் மனைவியின் காரை பின்தொடர்ந்து இரு இளைஞர்களுக்குத் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

நாட்டில் தலைநகரான டெல்லியில் அதிகளவில் குற்றச் செயல்கள் நடைபெறுவதாக பல ஆண்டுகளாக புகார்கள் எழுகின்றன. குறிப்பாக பெண்களுக்கான பாதுகாப்பு என்பது மாலை, இரவு நேரங்களில் அச்சுறுதலான வகையில் இருப்பதாக ஆர்வலர்கள் கூறி வரும் நிலையில், ஒரு பிரபலத்தின் மனைவியே அத்தகைய அச்சுறுத்தலை சந்தித்துள்ளார்.

2023 ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் நிதீஷ் ராணா. இவருக்கு சச்சி மார்வா என்ற பெண்ணுடன் 2019இல் திருமணம் நடைபெற்றது. இவர்கள் டெல்லியில் வாழ்ந்து வருகின்றனர். நிதீஷ் ராணா ஐபிஎல் போட்டியில் தற்போது பிசியாக கலந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் தான் அவரின் மனைவிக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ராணாவின் மனைவி சாச்சி மார்வா டெல்லி கீர்த்தி நகரில் தனது வேளையை முடித்து விட்டு காரில் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது இரு இளைஞர்கள் பைக்கில் வந்து அவரது காரில் மோதியுள்ளார். அத்துடன் நிற்காமல் அவரின் காரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர்.

பயந்து போன சாச்சி அதை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார். அங்கிருந்து தப்பி வந்து புகைப்படங்களுடன் டெல்லி காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார். அதற்கு காவல்துறையோ, நீங்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு வந்து விட்டீர்கள் அல்லவா! அடுத்தமுறை அவர்கள் பைக் நம்பரை குறித்து வைத்து சொல்லுங்கள் என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: "நான் ஒரு பைசா ஊழல் செய்தாக நீங்கள் கண்டுபிடித்தால் என்னை தூக்கில் போடுங்கள்.." - பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால்

இதனால், ஆத்திரமடைந்த சாச்சி நடந்த நிகழ்வுகளை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். தொடர்ந்து சம்பவத்திற்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கடும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில், டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்து இருவரில் ஒருவரை கைது செய்துள்ளது. மற்றொரு நபரை தேடி வருகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதை அடுத்து நிதீஷ் ராணா கொல்கத்தா அணியின் கேப்டனாக உள்ளார். அவரது மனைவி சாச்சி கட்டுமான டிசைனராக பணிபுரிகிறார்.

First published:

Tags: Crime News, Delhi