முகப்பு /செய்தி /இந்தியா / விதவிதமான கெட்அப்... பைக், கார் என மாறிமாறி பயணம்... பஞ்சாப் போலீசை திணறடிக்கும் அம்ரித் பால் சிங்!

விதவிதமான கெட்அப்... பைக், கார் என மாறிமாறி பயணம்... பஞ்சாப் போலீசை திணறடிக்கும் அம்ரித் பால் சிங்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

பல்வேறு தோற்றத்துடன் காணப்படும் அம்ரித் பால் சிங்கின் புகைப்படத்தை வெளியிட்டு கைது செய்ய போலீசாருக்கு உதவுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

  • Last Updated :
  • Punjab |

பஞ்சாப் பிரிவினையைக் கோரும் காலிஸ்தான் இயக்கத்தை தீவிரமாக ஆதரிக்கும் அம்ரித் பால் சிங்-ஐ பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் பால் சிங் 'வாரிஸ் பஞ்சாப் தே' என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பானது பஞ்சாப்பை பிரித்து தனி நாடாக அறிவிக்க கோரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில், அம்ரித் பால் சிங் உள்ளிட்ட 3 பேர் மீது ரூப்கர் மாவட்ட போலீசார் கடத்தல் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய லவ் ப்ரீத் சிங்க் என்பவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தபோது அவரை மீட்பதற்காக அம்ரித் பால் சிங் தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டார்.

இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்த நிலையில், அம்ரித் பால் சிங்கிற்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்ரித் பால் சிங் மீதான போலீசாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, லண்டன் இந்திய தூதரகத்தில் உள்ள இந்திய கொடி இறக்கப்பட்டு, காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வரும் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

பல்வேறு தோற்றத்துடன் காணப்படும் அம்ரித் பால் சிங்கின் புகைப்படத்தை வெளியிட்டு கைது செய்ய போலீசாருக்கு உதவுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

top videos

    முன்னதாக காவல்துறை அம்ரித் பால் சிங்கை துரத்திய போது குருத்வாராவிற்குச் சென்று, அங்கு தனது ஆடைகளை மாற்றியுள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர். அவர் தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையே கடந்த 18 ஆம் தேதி சுங்கச்சாவடி ஒன்றின் வழியாக காரில் அம்ரித்பால் சிங் தப்பித்து செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

    First published:

    Tags: Punjab