முகப்பு /செய்தி /இந்தியா / தேசிய கட்சி அந்தஸ்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட்: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

தேசிய கட்சி அந்தஸ்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட்: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில அந்தஸ்தை இழந்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரு கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரிப்பதற்கு தேர்தல் ஆணையம் சில அளவீடுகளை வைத்துள்ளது. அதன் படி, ஒரு கட்சி தேசிய கட்சி அந்தஸ்து பெறுவதற்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்க வேண்டும்  அல்லது அண்மையில் நடந்த தேர்தல்களில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் குறைந்தது 6 சதவீத வாக்குகளை அக்கட்சியின் வேட்பாளர்கள் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் நான்கு எம்.பி.க்களை பெற்றிருக்க வேண்டும்.

அல்லது மக்களவை தொகுதிகளில் மூன்று மாநிலங்களுக்கு குறையாமல் மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 2 சதவீத இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் உள்ளன.

இதையும் வாசிக்க: அருணாசலப் பிரதேசத்தில் 'துடிப்பு மிக்க கிராமங்கள்’ திட்டத்தை தொடங்கி வைக்கும் அமித் ஷா... சீனா கண்டனம்!

top videos

    இதில் எதையுமே பூர்த்தி செய்யாத நிலையில் இந்திய கம்யூனிஸ்ட், திரிணமுல், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தன. அதே சமயம் அண்மையில் பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தேசிய அந்தஸ்தை பெற்றுள்ளது. தேசிய அரசியலை நோக்கி பயணிக்கும் பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆந்திராவில் மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது. இதே போன்று புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியும் மாநில அந்தஸ்தை இழந்துள்ளது.

    First published:

    Tags: Communist Party, Election commission of India