முகப்பு /செய்தி /இந்தியா / திருப்பதி அருகே கார் விபத்தில் தம்பதி பலி - கோயிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது நேர்ந்த சோகம்!

திருப்பதி அருகே கார் விபத்தில் தம்பதி பலி - கோயிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது நேர்ந்த சோகம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Crime News : திருப்பதி கோயிலில் ஏழுமலையான வழிபட்ட பின் காரில் ஊர் திரும்பி கொண்டு இருந்த தம்பதி விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

  • Last Updated :
  • Andhra Pradesh, India

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே கார் விபத்தில் தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் இவரது மனைவி சியாமளா. தம்பதியினர் இருவரும் ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க தங்களது காரில் சென்றனர். இதனைத்தொடர்ந்து, இருவரும் திருப்பதியில் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு பின்னர் இன்று மதியம் காரில் ஊர் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அவர்கள் சென்ற கார் திருப்பதி சந்திரகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த சோலார் பேனல் பொருத்தப்பட்ட கம்பத்தின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் கார் தலைக்குப்புற கவிழ்ந்து சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி ஒன்று மீது மோதி நின்றது.

இதையும் படிங்க : அதிகரிக்கும் கொரோனா பரவல்... அலெர்ட் செய்த மத்திய அரசு - நாடு முழுவதும் தடுப்பு ஒத்திகை தீவிரம்!

மேலும் விபத்தில் கார் முழுவதுமாக சிதைந்து நிலையில் அதிலிருந்து கோபிநாத், சியாமளா தம்பதி உடல் நசுங்கி சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த சந்திரகிரி போலீசார் தம்பதியினர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்தில் தம்பதி பலியான சம்பவம் திருப்பதி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : புஷ்பராஜ் - திருப்பதி

First published:

Tags: Accident, Andhra Pradesh, Crime News, India