special Train from Chennai to Odisha: ரயில் விபத்தில் காயமடைந்த 55 தமிழர்களின் விவரம் கிடைக்கப் பெற்றதாக ரயில்வே எஸ்.பி., தகவல் தெரிவித்துள்ளார்.
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளை அடையாளம் காண உறவினர்களை அழைத்துச் செல்ல இன்றிரவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில், நேற்றிரவு கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பாகான பஜார் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது விபத்துக்குள்ளானது. அதன்பின்னர், அவ்வழித்தடத்தில் வந்துகொண்டிருந்த பெங்களூரு-ஹவுரா விரைவு ரயிலும் அந்த ரயில்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 261 பேர் உயிரிழந்தனர், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையும் வாசிக்க: Video : ஒடிசா ரயில் கோர விபத்துக்கு காரணமான 13 விநாடிகள்... நடந்தது இதுதான்!
இந்த ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளின் உறவினர்கள் செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 7.20 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் தெரிவிக்கையில், " அடையாளம் காணப்பட்ட சடலங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும், அதே சமயம் பல சடலங்களை அடையாளம் காண முடியவில்லை" என்று தெரிவித்தார். எனவே, ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளின் உறவினர்கள் செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
இந்த ரயிலில் பயணிகளின் உறவினர்கள் இலவசமாக பயணிக்கலாம். மேலும், ரயிலில் பயணம் செய்த தமிழர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்ள தகவல் உதவி மையத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. Toll Free No.1070, Mobile no: 94458 69843, Whatsapp no. 94458 69848, Landline No. 044-2859 3990 என்ற எண்களில் தமிழில் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Train Accident