முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடக தேர்தல் பரப்புரை... பொதுமக்களை நோக்கி ரூ.500 நோட்டுகளை அள்ளி வீசிய டி.கே.சிவக்குமார்...!

கர்நாடக தேர்தல் பரப்புரை... பொதுமக்களை நோக்கி ரூ.500 நோட்டுகளை அள்ளி வீசிய டி.கே.சிவக்குமார்...!

ரூ.500 நோட்டுகளை அள்ளி வீசிய டிகே சிவக்குமார்

ரூ.500 நோட்டுகளை அள்ளி வீசிய டிகே சிவக்குமார்

Karnataka election 2023 | டி.கே சிவக்குமாரும், காங்கிரஸ் கட்சியினரும் கர்நாடக மக்களை பிச்சைக்காரர்கள் என்று நினைப்பதாக அம்மாநில முதலமைச்சர் பொம்மை விமர்சனம் செய்துள்ளார்.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகாவில் தேர்தல் பிரச்சார பேரணியின் போது காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் பொதுமக்கள் மீது 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாண்டியாவில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கலந்து கொண்டார். பெவினஹள்ளி அருகே பிரச்சாரம் மேற்கொண்டபோது பிரச்சார வாகனத்தின் மேல் நின்றவாறு, அங்கு வரவேற்பளிப்பதற்காக கலைநிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது 500 ரூபாய் நோட்டுகளை வீசினார்.

Also Read : மே 10ஆம் தேதி கர்நாடகாவில் ஒரே கட்டமாக தேர்தல்..!

top videos

    இதனால், அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் முட்டி மோதி அந்தப் பணத்தை எடுத்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ரூபாய் நோட்டுகளை வீசுவதன் மூலம் டி.கே சிவக்குமாரும், காங்கிரஸ் கட்சியினரும் கர்நாடக மக்களை பிச்சைக்காரர்கள் என்று நினைப்பதாகவும், இதே மக்கள் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்டுவார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.

    First published:

    Tags: Congress, Karnataka