முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ் கட்சி முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ் கட்சி முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..

காங்கிரஸ்

காங்கிரஸ்

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலைக் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அங்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பாஜக சார்பில் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்கள் ஆதரவைத் திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலைக் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 124 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் D.K.சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, வருணா தொகுதியிலும் போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பிரியங்க் கார்கே சித்தாபூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும், காந்திநகர் தொகுதியில் தினேஷ் குண்டுராவ் போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதற்கட்ட பட்டியலில் 6 பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகா சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Congress, Election, Karnataka