முகப்பு /செய்தி /இந்தியா / ஒடிசா ரயில் விபத்து : பிரதமர் மோடியிடம் 11 கேள்விகளை எழுப்பிய மல்லிகார்ஜுன கார்கே

ஒடிசா ரயில் விபத்து : பிரதமர் மோடியிடம் 11 கேள்விகளை எழுப்பிய மல்லிகார்ஜுன கார்கே

மல்லிகார்ஜுன கார்கே

மல்லிகார்ஜுன கார்கே

2016-ல் கான்பூரில் ரயில் தடம் புரண்டதில் 150 பேர் உயிரிழந்தனர். இந்த துயர நிகழ்வை தேசம் இன்னும் நினைவில் வைத்திருக்கிறது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடிக்கு 11 கேள்விகள் அடங்கிய கடிதம் எழுதியுள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேர்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு எத்தனை நிதியுதவி அளித்தாலும் இழப்பு ஈடுசெய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ள கார்கே, அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்

3 லட்சம் காலிப்பணியிடங்கள் ரயில்வேயில் நிரப்பப்படாதது ஏன் என்று கேட்டுள்ளார்.

போதுமான அளவு பணியாளர்கள் இல்லாததால் ஏற்கனவே இருக்கும் பணியாளர்கள் அழுத்தத்துடன் பணியாற்றுவதாக ரயில்வே வாரியமே ஒப்புக்கொண்டுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார்.

தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதியே ரயில் விபத்து குறித்து எச்சரித்தும், அதை அலட்சியப்படுத்தியது ஏன் என்றும், ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தை ஏன் வலுவாக்கவில்லை என்றும் கார்கே கடிதத்தில் கேட்டுள்ளார்

சிஏஜி அறிக்கையில் 10ல் 7 ரயில் விபத்துகள் தடம் புரள்வதால் நிகழ்வதாக குறிப்பிட்டும், அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரயில் வழித்தடங்களில் வெறும் 4 விழுக்காடு மட்டுமே கவச் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது ஏன் என்றும் ஒடிசா ரயில் விபத்திற்கான மூல காரணம் கண்டறியப்பட்டதாக ரயில்வே அமைச்சர் கூறியுள்ள நிலையில், பின்னர் எதற்கு சிபிஐ விசாரணை என்றும் கார்கே கேட்டுள்ளார்.

2016-ல் கான்பூரில் ரயில் தடம் புரண்டதில் 150 பேர் உயிரிழந்தனர். இந்த துயர நிகழ்வை தேசம் இன்னும் நினைவில் வைத்திருக்கிறது. தேசிய புலானாய்வு முகமை  விசாரணைக்கு ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, 2017ல் நடந்த தேர்தல் தேர்தல் பரப்புரையில், " நாட்டின் அமைதியாக சீர்குலைக்க சதி நடந்திருக்கலாம்" என்றும் தீங்கு இழைத்தோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் நீங்களே தெரிவித்தீர்கள்.

ஆனால், இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ, விசாரணையின் முடிவில் சதி இல்லையென்று கூர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மறுத்து விட்டது. அந்த, 150 இறப்புகளுக்கு யார் பொறுப்பு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் வாசிக்கதிமுக, காங்கிரஸ் வைத்த கோரிக்கை... எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு... காரணம் இதுதான்..

தற்போதும், நிபுணத்துவம் இல்லாத அரசு முகமையை விசாரணைக்குள் கொண்டு வருவது 2016ம் ஆண்டின் துயர நிகழ்வை தான் நினைவூட்டுகிறது. பாதுகாப்புக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் எண்ணம் இல்லை உங்கள் அரசாங்கத்திற்கு இல்லை என்பதை அவை காட்டுகின்றன. மாறாக, திசைதிருப்பும் முயற்சி மூலம் மக்களுக்கு பதில் சொல்ல கடமையில் இருந்து தப்பித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாலசோர் ரயில் விபத்து போல மேலும் ஒரு சம்பவம் நடக்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரதமர் மோடியை, மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

First published:

Tags: Indian National Congress, PM Modi, Train Accident