முகப்பு /செய்தி /இந்தியா / ஊழலில் திளைத்த காங்கிரசால் மக்களுக்கு சேவை செய்ய முடியாது.. கர்நாடகாவில் பிரதமர் மோடி பேச்சு

ஊழலில் திளைத்த காங்கிரசால் மக்களுக்கு சேவை செய்ய முடியாது.. கர்நாடகாவில் பிரதமர் மோடி பேச்சு

கர்நாடகாவில் பிரதமர் மோடி பரப்புரை

கர்நாடகாவில் பிரதமர் மோடி பரப்புரை

ஊழலில் திளைத்துள்ள காங்கிரஸ் கட்சியால் கர்நாடக மக்களுக்கு சேவை செய்ய முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Karnataka, India

காங்கிரஸ் ஆட்சியில் 300 ரூபாய்க்கு கிடைத்த ஒரு ஜிபி டேட்டா, பாஜக ஆட்சியில் 10 ரூபாய்க்கு கிடைப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் வரும் 10ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாளையுடன் தேர்தல் பரப்புரை முடிகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகன பேரணி மேற்கொண்டார்.

சாலை மார்க்கமாக பேரணி மேற்கொண்ட பிரதமருக்கு வழிநெடுகிலும் பாஜகவினர் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பேரணியின் போது சுமார் 8 லட்சம் பேர் பிரதமரை வரவேற்றதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, பாதாமி தொகுதியில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 300 ரூபாய்க்கு கிடைத்த 1 ஜிபி மொபைல் டேட்டா பாஜக ஆட்சியில் 10 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றார். காங்கிரஸ் கட்சியால் ஜனநாயக மாண்பை சீர்குலைக்க மட்டுமே முடியும் என்று, 85 சதவீதம் அளவுக்கு கமிஷன் பெற்ற சாதனையை கொண்டது என சாடினார். ஊழலில் திளைத்துள்ள காங்கிரஸ் கட்சியால் கர்நாடக மக்களுக்கு சேவை செய்ய முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இதற்கிடையே, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், லிங்காயத் மற்றும் பட்டியலினத்தவரின் இடஒதுக்கீடு குறைந்துவிடும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.  ஆட்சி தக்க வைக்க முன்னணி பாஜக தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு... மத்திய பிரதேச முதலமைச்சர் அறிவிப்பு

top videos

    பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என பலரும் கர்நாடகாவை முகாமிட்டு நேற்று தீவிரமாக வாக்கு சேகரித்தனர். நேற்று போலவே, இன்றும் பிரதமர் மோடி பிரம்மாண்ட சாலைப் பேரணி மேற்கொள்ளவுள்ளார்.

    First published:

    Tags: Congress party, Karnataka Election 2023, PM Modi, PM Narendra Modi