முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகாவில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும்... கருத்துக் கணிப்பு முடிவுகள்..!

கர்நாடகாவில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும்... கருத்துக் கணிப்பு முடிவுகள்..!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல்

கர்நாடக சட்டமன்றத் தேர்தல்

கர்நாடகாவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன் நிறைவடைந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மிகவும் விறுவிப்பாக நடைபெற்றது. இன்று பதிவான வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. ரிபப்ளிக் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பாஜக 84 - 100 தொகுதிகள்  வரையும், காங்கிரஸ் 94- 108 வரையிலும், மஜத 24 - 32 தொகுதிகள் வரையிலும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் வாக்குறுதி:  காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் 6 முக்கிய உத்தரவாதங்களை அளித்தது. 

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 நிதியுதவி, ஏழைக் குடும்பங்களுக்கு 10 கிலோ இலவச அரிசி, வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 நிதியுதவி, பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, அனைத்து தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்  உள்ளிட்ட 5 உத்தரவாதங்களை அளித்தது. மேலும், இந்த 5 வாக்குறுதிகளையும் முதல் கையெழுத்தில் நிறைவேற்றப்படும் என்ற 6வது வாக்குறுதியையும் அளித்தது. 

மேலும், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை வழிநடத்தும், ஊக்குவிக்கும் எந்தவொரு அமைப்பின் மீதும் (பஜ்ரங் தள்), தனிநபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய அமைப்புகள் சட்ட ரீதியான தடை செய்யப்படும் என்றும்  தெரிவித்தது. 

பாஜக வாக்குறுதி:

top videos

    பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில், பொது சிவில் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தது. மேலும், ஏழைகளுக்கு நாள்தோறும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும் என்றும், உகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி நாட்களில் ஏழைகளுக்கு இலவச சிலிண்டர் வழங்குவோம் என்றும் தெரிவித்தது.

    First published:

    Tags: BJP, Congress, Karnataka Election 2023