முகப்பு /செய்தி /இந்தியா / வாக்குகளை பெற காங்கிரஸ் கட்சி பயங்கரவாத அமைப்புகளுக்கு துணை போகிறது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

வாக்குகளை பெற காங்கிரஸ் கட்சி பயங்கரவாத அமைப்புகளுக்கு துணை போகிறது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

சுதந்திரம் பெற்றது முதலே காங்கிரஸ் கட்சி நாட்டை கொள்ளையடித்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். கர்நாடகாவில் டபுள் என்ஜின் அரசு தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூ கார்கே விமர்சித்துள்ளார்.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிரதமர் மோடி பல்லாரியில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பிரதமர் மோடி மேடை ஏறியதும் அவருக்கு மாலையும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.

பின்னர் தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். சுதந்திரம் பெற்றது முதலே அக்கட்சி நாட்டை கொள்ளையடித்து வருவதாக சாடினார். வாக்கு அரசியலை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து வருவதாகவும் பிரதமர் விமர்சித்தார். வாக்குகளை பெற காங்கிரஸ் கட்சி பயங்கரவாத அமைப்புகளுக்கு துணை போவதாக கூறிய மோடி, பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம் வயிற்றெரிச்சல் படுவதாக கடுமையாக சாடினார்

இதையும் படிக்க : தி கேரளா ஸ்டோரி படத்துக்கு பிரதமர் ஆதரவு

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியானதிலிருந்து பஜ்ரங்தள் அமைப்புக்கு ஆதரவாக முழக்கமிடும் மோடி, பல்லாரி கூட்டத்திலும், ஜெய் பஜ்ரங்தள் என கோஷமிட்டார்.

top videos

    இது குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலத்தில் இரட்டை இஞ்சின் அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. இருந்தாலும் எங்கள் இரட்டை இஞ்சின் அரசு வேலை செய்கிறது என்று கூறுகின்றனர். 9 வயதில் செய்யாததை இன்னேன் செய்வீர்கள்? பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே தான் இருக்கிறது. மக்களின் வாழ்வைப் பற்றி பாஜக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என விமர்சித்துள்ளார்.

    First published:

    Tags: Congress, Karnataka Election 2023, PM Narendra Modi