முகப்பு /செய்தி /இந்தியா / “வறுமை ஒழிப்பு என காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் கோடீஸ்வரர்களாகிவிட்டார்கள்..!” - பிரதமர் மோடி விமர்சனம்

“வறுமை ஒழிப்பு என காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் கோடீஸ்வரர்களாகிவிட்டார்கள்..!” - பிரதமர் மோடி விமர்சனம்

தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி

தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி

மே 10ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடகா தேர்தலுக்கு அனைத்து கட்சியின் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Karnataka, India

நாட்டின் வறுமை ஒழிப்பில் காங்கிரஸ் தோல்வி அடைந்தாலும், தலைவர்கள் கோடீஸ்வரர்களாகிவிட்டதாக கர்நாடக தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய பிரச்சாரத்தில் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, இசைக்கருவியை வாசித்து அசத்தினார்.

பிரதமர் மோடி

பின்னர், ஹோஸ்பெட் நகரில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர், நாட்டில் வறுமையை ஒழிப்பதாக கூறிய காங்கிரஸ், அதில் தோல்வி அடைந்ததாக குறிப்பிட்டார். ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் பெரும் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாக உருவெடுத்து விட்டனர் என்று விமர்சித்தார்.

இதையும் படிக்க : ராகுலுக்கு சிறை தண்டனை... தடை விதிக்க மறுத்த குஜராத் உயர்நீதிமன்றம்..!

இதையடுத்து, கல்புர்கி தொகுதிக்குச் சென்ற பிரதமர் மோடி, பரப்புரைக்கு முன்பாக அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுடன் உரையாடினார். ஒவ்வொருவரும் என்னவாக விரும்புகிறீர்கள் என கேட்ட அவர், யாருக்கும் நாட்டின் பிரதமர் ஆக விருப்பம் இல்லையா என குழந்தைகளிடம் வினவினார். இதையடுத்து, கல்புர்கி நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் பிரதமர் பங்கேற்றார். இதேபோல, பெங்களூருவின் B.T.M Layout தொகுதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரம்மாண்ட பேரணி நடத்தினார்.

top videos

    கர்நாடகா தேர்தல் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கவுள்ளதும், வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: BJP, Karnataka, Karnataka Election 2023, PM Narendra Modi