முகப்பு /செய்தி /இந்தியா / பாஜக எம்பிக்கு எதிரான மல்யுத்த வீரர்களின் போராட்டம்... நேரில் சென்று பிரியங்கா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு..

பாஜக எம்பிக்கு எதிரான மல்யுத்த வீரர்களின் போராட்டம்... நேரில் சென்று பிரியங்கா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு..

பிரியங்கா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால்

பிரியங்கா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை சந்தித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பெண்களிடம் அத்துமீறுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கிலிடப்பட வேண்டும் என ஆவேசமாக பேசினார்.

  • Last Updated :
  • Delhi, India

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியுள்ள வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மல்யுத்த வீரர், வீராங்கனைகளை சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியளர்களை சந்தித்து பேசிய பிரியங்கா காந்தி, ’பதக்கங்கள் வென்றால் மட்டுமே பிரதமர் மோடி வீரர், வீராங்கனைகளை அழைத்து டீ விருந்தளிப்பார் என்று கூறினார். இதுவரை இவர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்காததற்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க : மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு பின்னால் காங்கிரஸ் உள்ளது - பாஜக எம்.பி குற்றச்சாட்டு

இதனைத் தொடர்ந்து மாலையில் அவர்களை சந்தித்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், வீராங்கனைகளின் துயரங்களை கேட்டறிந்தார். அப்போது அவர், பெண்களிடம் அத்துமீறுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கிலிடப்பட வேண்டும் என ஆவேசமாக பேசினார். மேலும் உலகமே இந்தப் போராட்டத்தை பார்த்து வருவதாக கூறி, அவர்களுக்கு ஆதரவளித்தார்.

இதற்கிடையே 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் மீது டெல்லி காவல் துறை வழக்குபதிவு செய்துள்ளது. மேலும் போக்சோ பிரிவிலும் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

top videos

    இந்தநிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவியில் இருந்து விலகப் போவது இல்லை என பிரிஜ் பூஷண் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தான் ராஜினாமா செய்தால், வீராங்கனைகளின் குற்றச்சாட்டு உண்மையாகிவிடும் என பிரிஜ் பூஷண் கூறினார்.

    First published:

    Tags: Arvind Kejriwal, Priyanka Gandhi