முகப்பு /செய்தி /இந்தியா / சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்...

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்...

பிரதமர் மோடி - மல்லிகார்ஜூன கார்கே

பிரதமர் மோடி - மல்லிகார்ஜூன கார்கே

Mallikarjun Kharge Write Letter to PM Modi | 2021ல் நடத்தப்பட வேண்டிய கணக்கெடுப்பு இன்னும் நடக்கவில்லை என கடிதத்தில் மல்லிகார்ஜூன கார்கே குறிப்பிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Delhi, India

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதன்முறையாக, 2011-12ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதாக குறிப்பிட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கே, 2014ஆம் ஆண்டு பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, சாதி சார்ந்த தரவுகள் வெளியிடவில்லை என தமது கடிதத்தில் கூறியுள்ளார். சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நம்பத்தன்மை வாய்ந்தது என்றும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது மத்திய அரசின் பொறுப்பு எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: எம்.பி., அமைச்சர் பதவி வேண்டாம்.. பாஜகவுக்கு குட்பை.. காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர்

top videos

    2021ல் நடத்தப்பட வேண்டிய கணக்கெடுப்பு இன்னும் நடக்கவில்லை என கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கே, மத்திய அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, 2011ஆம் ஆண்டு மத்திய அரசு நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட வேண்டும் என்று கர்நாடகா தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியிருந்தார்.

    First published:

    Tags: Mallikarjun Kharge, PM Modi, Sensex