நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். இதில் முக்கிய நிகழ்வாக தமிழ்நாட்டின் முன்னணி சைவ மடாதிபதிகள் பாரம்பரியம் மிக்க செங்கோலை பிரதமரிடம் தரவுள்ளனர். இந்த செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்படவுள்ளது.
இந்த செங்கோல் நாடு சுதந்திரம் அடைந்த போது திருவாவடுதுறை ஆதீனத்தால் அன்றைய பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க செங்கோல் மீண்டும் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. செங்கோல் தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கருத்து மோதல்கள் நிலவி வருகின்றன.
மத்திய பாஜக அரசு செங்கோல் தொடர்பாக கூறும் வரலாற்றுக்கு உரிய ஆதரங்கள் இல்லை என காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கு அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டித்து பதிவு வெளியிட்டுள்ளார்ய அவர் தனது பதிவில், "சுதந்திரம் பெற்றபோது ஆங்கிலேயரிடம் இருந்து அதிகாரம் கைமாறுவதன் அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டது. இதற்கு ஆதாரம் இல்லை என காங்கிரஸ் கூறுவது கண்டிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி ஏன் இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மிகவும் வெறுக்கிறது? இந்திய சுதந்திரத்தின் அடையாளமாக, நேருவுக்கு புனித தன்மை கொண்ட செங்கோல் தமிழ்நாட்டில் உள்ள ஒரு புனித சைவ மடத்தால் வழங்கப்பட்டது. ஆனால் அது ஒரு 'வாக்கிங் ஸ்டிக்' ஆக அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க: ராஜஸ்தான் மணல்... உபி ஜல்லி... தமிழகத்தின் செங்கோல்... புதிய நாடாளுமன்ற கட்டத்தின் சிறப்புகள் என்ன?
இப்போது மற்றொரு வெட்கக்கேடான அவமானத்தை காங்கிரஸ் செய்துள்ளது. புனித சைவ மடமான திருவாவடுதுறை ஆதீனம், இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் செங்கோலின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார். ஆதினத்தின் வரலாற்றை பொய் என்று காங்கிரஸ் கூறுகிறது. காங்கிரஸ் தனது நடத்தையை பற்றி சிந்திக்க வேண்டும்." இவ்வாறு தனது பதிவில் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amit Shah, Home Minister Amit shah