முகப்பு /செய்தி /இந்தியா / காங்கிரஸ் என்னை 91 முறை அவமதித்துள்ளது - தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி

காங்கிரஸ் என்னை 91 முறை அவமதித்துள்ளது - தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

கர்நாடகாத் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

  • Last Updated :
  • Karnataka, India

காங்கிரஸ் கட்சி தன்னை 91 முறை அவமதித்துள்ளது என்று  பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாத் தேர்தல் பரப்புரையில் குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடகத்தில் வரும் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் என மும்முனைப் போட்டி அந்த மாநிலத்தில் நிலவுகிறது. வாக்காளர்களைக் கவர தேசிய அரசியல் தலைவர்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று கர்நாடக மாநிலம் பிதர் பகுதியில் பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, ‘காங்கிரஸ் கட்சி தன்னை 91 முறை அவமதித்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

Also Read : ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருக்கே.. சொகுசு வசதிகளுடன் கூடிய மறுவாழ்வு மையம்!

மேலும், காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட பாஜக ஆட்சியில் வெளிநாட்டு முதலீடுகள் மும்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறினார். கர்நாடக மக்கள் மீண்டும் பாஜகவை ஏற்கத் தயாராகி விட்டதாகவும் மோடி கூறினார். விவசாயிகளுக்குக் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்றும் சாடியுள்ளார்.

top videos
    First published:

    Tags: Congress, Karnataka, Karnataka Election 2023, PM Modi