200 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கு இரண்டாயிரம் ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட ஐந்து முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சித்தராமையா, விதான் சவுதாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதல் அமைச்சரவைக் கூட்டம் ஒரு வாரத்திற்குள் கூட்டப்படும் என்றும், அதில் ஐந்து முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் 200 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கு இரண்டாயிரம் ரூபாய், 10 கிலோ விலையில்லா அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய் மற்றும் டிப்ளமோ பயின்றவர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித் தொகை ஆகிய திட்டங்கள் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தத் திட்டங்களை செயல்படுத்த 50 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று கூறிய முதல்வர் சித்தராமையா, மத்திய அரசிடம் இருந்து முந்தைய பாஜக மாநில அரசு, முறையாக வரி வருவாயை பெறவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
இதையும் வாசிக்க: 500 சந்தேகங்கள்... 1000 மர்மங்கள்... 2000 பிழைகள்! - ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெற்றது குறித்து முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!
நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி கர்நாடகா மாநிலத்துக்கு ஐந்தாயிரத்து 495 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்றும், இதனை பாஜக மாநில அரசு கேட்டுப் பெறாததால் கர்நாடகா மாநிலத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.