முகப்பு /செய்தி /இந்தியா / நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் Swiggy அதிக டெலிவரி செய்தது என்ன தெரியுமா?

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் Swiggy அதிக டெலிவரி செய்தது என்ன தெரியுமா?

ஸ்விக்கி

ஸ்விக்கி

உணவு பிரியர்களாகவும் இருக்கும் லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த உணவுகளை ஆசை தீர சுவைத்து கொண்டே போட்டிகளை டிவி-யில் பார்த்து மகிழக்கூடிய சீசனாகவும் அமைந்தது.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு நடப்பாண்டு நடைபெற்ற IPL 2023 இறுதிபோட்டி மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. பொதுவாக IPL என்பது கிரிக்கெட் ரசிகர்கள் இந்த விளையாட்டை கொண்டாடி தீர்க்க ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது.

அதோடு மட்டுமின்றி உணவு பிரியர்களாகவும் இருக்கும் லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த உணவுகளை ஆசை தீர சுவைத்து கொண்டே போட்டிகளை டிவி-யில் பார்த்து மகிழக்கூடிய சீசனாகவும் இருந்தது. இதற்கிடையே நாட்டில் முன்னணி ஃபுட் டெலிவரி பிளாட்ஃபார்ம்களில் ஒன்றாக இருக்கும் Swiggy, நடந்து முடிந்த ஐபிஎல் 2023 சீசனில், தங்கள் பிளாட்ஃபார்மில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் பற்றிய தகவல்களை சமீபத்தில் ட்விட்டரில் வெளியிட்டது.

இந்த IPL சீசனுக்கு மத்தியில் பிரியாணி தான் மக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாக உருவெடுத்து வெற்றி பெற்று மகுடத்தை சூடியிருப்பதாக Swiggy குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான ஒரு ட்வீட்டில், தங்களது ஆப்-ல் நிமிடத்திற்கு 212 பிரியாணிகள் என்ற வீதத்தில் இந்த IPL சீசனில் மொத்தம் 12 மில்லியன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக ஸ்விக்கி கூறியிருக்கிறது. இதன் மூலம் சாதாரண நாளிலேயே பிரியாணியை மிகவும் விரும்பி சாப்பிடும் மக்கள், இந்த IPL சீசனில் பிரியாணியை தாறுமாறாக ஆர்டர் செய்து சாப்பிட்டிருப்பதை Swiggy வெளிபடுத்தி உள்ளது. ஐபிஎல் ஸ்பெஷல் மெனுக்கள், குறிப்பாக காம்போஸ் சிறப்பான வரவேற்பை பெற்றதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

ஆணுறை டெலிவரி அதிகரிப்பு

விரைவாக மளிகைப் பொருட்களை வழங்கும் Swiggy-யின் சேவையான Swiggy Instamart, குறிப்பாக ஐபிஎல் இறுதி போட்டியின் போது எதிர்பாராத ஒரு பொருளின் அதிகரித்த விற்பனையை கண்டது. கடந்த மே 29 அன்று வேடிக்கையான புள்ளிவிவரம் அடங்கிய ட்விட்டை ஷேர் செய்த Swiggy, "Swiggy Instamart மூலம் இதுவரை 2423 ஆணுறைகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இன்று இரவு 22-க்கும் மேற்பட்ட வீரர்கள் விளையாடுவது போல் தெரிகிறது" என நகைச்சுவையாக குறிப்பிட்டு உள்ளது.

ஜிலேபி - பஃப்டா (Jalebi, Fafda)

பிரியாணியை தவிர்த்து குஜராத்தி உணவு வகைகளான ஜிலேபி மற்றும் பாஃப்டா இந்த ஐபிஎல் சீசனில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த சூப்பர் சுவையான காம்பினேஷன் உணவு ஐபிஎல் 2023 சீசனில் 368,353 ஆர்டர்களை பெற்றதாக Swiggy குறிப்பிட்டுள்ளது. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் இருந்து சென்னைவாசிகள் 3,641 யூனிட் தயிர் மற்றும் 720 யூனிட் சர்க்கரையை ஆர்டர் செய்துள்ளதாகவும் ஸ்விக்கி பகிர்ந்துள்ளது. இறுதி போட்டியன்று போட்டி நடந்த அகமதாபாத்தை விட சென்னை மூன்று மடங்கு அதிக சூப் பவுல்களை ஆர்டர் செய்ததையும் ஸ்விக்கி வெளிப்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Swiggy