முகப்பு /செய்தி /இந்தியா / காங்கிரஸ் வேட்பாளர் பெயரில் போலியான வேட்பாளரை பாஜக இறக்கியதாக புகார்...!

காங்கிரஸ் வேட்பாளர் பெயரில் போலியான வேட்பாளரை பாஜக இறக்கியதாக புகார்...!

கர்நாடக சட்டப்பேரவைத்   தேர்தல்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்

Karnataka | காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டிக்கு 57,781 வாக்குகள் கிடைத்தன. 

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடகாவிலுள்ள ஜெயாநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா பெயரில், மற்றொரு வேட்பாளரை டம்மியாக களமிறக்கி பாஜக அவரை தோற்கடித்ததாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பிட்ட அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டிக்கு 57,781 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராமமூர்த்திக்கு 57,797 வாக்குகள் கிடைத்த நிலையில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தச் சூழலில் சவுமியா ரெட்டிக்கு போட்டியாக அதே பெயர் கொண்ட வேறொரு பெண் சுயேச்சையாக ஜெயாநகரில் போட்டியிட்டு 320 வாக்குகள் பெற்றார்.

வாக்காளர்களை குழப்ப வேண்டும் என்ற நோக்கத்திலேயே, மற்றொரு சவுமியா ரெட்டியை பாஜக டம்மி வேட்பாளராக களமிறக்கியதாக காங்கிரஸ் வேட்பாளரின் தந்தை ராமலிங்க ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க... வெயில் தாக்கத்துக்கு நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு... 7 கி.மீ நடந்தே சென்றதால் விபரீதம்..!

சுயேச்சை வேட்பாளர் பரப்புரைக்கே செல்லாமல் 320 வாக்குகளை பெற்றுள்ளார். இவர்  ஒரு பாஜக ஆதரவாளர் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: BJP, Congress, Karnataka