முகப்பு /செய்தி /இந்தியா / ஒரு பலாப்பழம் ரூ.4 லட்சத்திற்கு விற்பனை... எங்கு தெரியுமா?

ஒரு பலாப்பழம் ரூ.4 லட்சத்திற்கு விற்பனை... எங்கு தெரியுமா?

பலாப்பழம்

பலாப்பழம்

கடலோர பகுதியில் விளைந்த ஒரு பலாப்பழம் கர்நாடகாவில் ரூ.4 லட்சத்திற்கும் அதிகமாக விலையில் விற்கப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

நாடு முழுவதும் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ள நிலையில், தற்போது சந்தையில் அதிக தேவை உள்ளது. பலா வெறும் பழமாக மட்டுமல்லாது பல சுவையான உணவுகளை தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது. பலாப்பழம் சிப்ஸுகள் மற்றும் ஊறுகாய்களும் மிகவும் பிரபலமாக உள்ளன.

மக்களிடையே இத்தனை விதமான உணவு பொருளாதாக பயன்படுத்தப்படும் இந்த பலாப்பழம், லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை ஆகிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா. ஆம், இது நம்பமுடியாததாகத் தோன்றினாலும், சமீபத்தில் கடலோர பகுதியில் விளைந்த ஒரு பலாப்பழம் கர்நாடகாவில் ரூ.4 லட்சத்திற்கும் அதிகமாக விற்கப்பட்டது.

மங்களூருவில் இருந்து கிழக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்ட்வாலில் நடந்த ஏலத்தில், பலாப்பழம் விற்கப்பட்ட விலையைக் கண்டு மக்கள் திகைத்து போனார்கள். அங்கு புதிதாக புனரமைக்கப்பட்ட மூலரபட்னா பள்ளிவாசல் திறப்பு விழாவில் சமய சொற்பொழிவுக்குப் பின்னர் பலாப்பழ ஏலம் நடைபெற்றது. அந்த உள்ளூர் பகுதியைச் சேர்ந்த தலைவர்களான அஜீஸ் மற்றும் லத்தீஃப் இடையே கடுமையான போட்டிக்குப் பிறகு பழங்கள் விற்கப்பட்டன. இறுதியாக ஒரு பலாப்பழம் ரூ.4.33 லட்சத்துக்கு விற்கப்பட்டதை அறிந்து மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

ஏலம் விடப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காய்கறிகளை தவிர, மசூதியில் வழங்கப்படும் பல பொருட்களும் அதிக விலைக்கு ஏலம் சென்றன. மொத்த வசூல் தொகை மசூதியின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டிற்காக நிர்வாக குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தியாவில் பலருக்கும் பிடித்தமான பலாப்பழம் உணவு என்பதை தாண்டி பலருக்கு வேலை வாய்ப்பையும் அளித்துள்ளது. கடந்த ஆண்டு, ராஜஸ்ரீ ஆர் பலாப்பழத்தைப் பயன்படுத்தி 400க்கு மேற்பட்ட பொருள்களா தயாரிக்கும் ஸ்டார்ட் அப் தொடங்கப்பட்டது.

இதையும் படிங்க: கோதுமை விவசாயத்தில் புதுமை.. கருப்பு கோதுமை பயிரிட்டு அசத்தும் விவசாயி.!

top videos

    சைவ கூழ் மற்றும் விதைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மாவு முதல் உலர்ந்த பலாப்பழ விதைகளின் பாக்கெட்டுகள் வரை, இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பலாப்பழத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த ஸ்டார்ட்அப் பலாப்பழ பாஸ்தாவையும் விற்பனை செய்கிறது. பலாப்பழம் பர்கர் பஜ்ஜி, வரமிளகாய், பாயாசம் கலவை, பலாப்பழம் மற்றும் பலாப்பழ விதை மாவு மற்றும் சாக்லேட்டுகள் போன்ற மிக நீண்ட பட்டியல் கொண்டு பொருள்களை இங்கு தயாரிக்கின்றனர்.

    First published:

    Tags: Jack Fruit, Karnataka