முகப்பு /செய்தி /இந்தியா / கொச்சியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து.... மூன்று பேர் காயம்..

கொச்சியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து.... மூன்று பேர் காயம்..

ஹெலிகாப்டர் விபத்து

ஹெலிகாப்டர் விபத்து

கொச்சியில் சர்வதேச விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

  • Last Updated :
  • Kochi [Cochin], India

கேரளா மாநிலம் கொச்சி அருகே கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கடற்படை விமானி உள்பட மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.

நெடும்பசாரி விமானநிலையத்தில் கடற்படைக்குச் சொந்தமான ஏ.எல்.ஹெச் துருவ் மார்க் 3 ஹெலிகாப்டரை சோதனை செய்யும் பணி நடைபெற்று வந்தது. ஹெலிகாப்டர் சுமார் 25 அடி உயரத்தில் இருந்து பறந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.

Also Read : நீயும் இப்போ போலீஸ் தான்.. 5 வயது சிறுவனுக்கு பணி ஆணை வழங்கிய எஸ்பி.. சத்தீஸ்கரில் நெகழ்ச்சி சம்பவம்

விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் விபத்து நடைபெற்ற தளம் தற்காலிகமாக மூடப்பட்டது.

First published:

Tags: Helicopter, Helicopter Crash, Kochi