உத்தரப் பிரதேச மாநிலத்தில் 10 வகுப்பு மாணவி பள்ளியில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சன்பீம் என்ற தனியார் பள்ளிக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியின் முதல்வர் மாணவியின் வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பள்ளிக்கு வருமாறு அழைத்துள்ளார்.
காலை 9 மணி அளவில் மாணவி பள்ளிக்கு சென்ற நிலையில், ஒரு மணிநேரம் கழித்து மாணவி மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக பெற்றோருக்கு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. பதறிப்போன பெற்றோர் பள்ளிக்கு வந்து பார்த்த போது அவர்களுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் முன்னுக்குப் பின் முரணான தகவல் தந்துள்ளது.
மாணவி ஊஞ்சலில் இருந்து விழுந்து இறந்ததாக பள்ளி தரப்பு கூறிய நிலையில், அவர் மாடியில் இருந்து விழுவது சிசிடிவி காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது. எனவே, மாணவியை யாரோ மேலே இருந்து தூக்கி வீசியிருக்கிறார்கள் என பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், மாணவி விழுந்த இடத்தில் இருந்து ரத்த கறை போன்ற தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியை கல்லால் அடித்து கொன்று நரமாமிசத்தை உண்ட இளைஞர்.. பகீர் சம்பவம்
இதனால், சந்தேகமடைந்த மாணவியின் தந்தை போலீசாரை நாடியுள்ளார். மாணவியை பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் அபிஷேக் மற்றும் மேலாளர் பிரிஜேஷ் யாதவ் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து அதை மறைக்க மாடியில் இருந்து தூக்கி வீசியதாக புகார் தெரிவித்துள்ளார். இந்த குற்றத்திற்கு பள்ளி முதல்வர் ராஷ்மி பாடியாவும் உடந்தை என குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதன் பேரில், அயோத்தி காவல்துறை பள்ளி முதல்வர், மேலாளர், விளையாட்டு ஆசிரியர் ஆகியோர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை பிரிவான 302, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாணவியின் உடற்கூறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதுபன் சிங் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Uttar pradesh