பொருளாதார ரீதியாக நலிவடைந்த முற்பட்ட பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரிய மனு மீதான விசாரணை வரும் 9ம் தேதி முதல் தொடங்குகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி சந்திரசூட் தலைமையில் 5 நபர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த மறுபரிசீலனை மனுவை விசாரிக்க இருக்கிறது.
மத்திய அரசு பணிகளுக்கான நியமனத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த முற்பட்ட பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. முன்னேறிய வகுப்பில் இருக்கும் ஏழைகளுக்கு மட்டுமே இந்த 10% இட ஒதுக்கீடு கிடைக்கும்.
இதற்கு அவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். ஐந்து ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட விவசாய நிலத்தை வைத்திருக்கக் கூடாது. 1000 சதுர அடி அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு பொருந்தாது. இதுபோன்ற சில விதிமுறைகள் உள்ளன.
இந்த சட்டத்திருத்தம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டிற்கு எதிரானது என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, ஜேபி பார்திவாலா, எஸ் ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அரசியமலைப்பு அமைப்பு விசாரித்தது. 5 நீதிபதிகளில், 3 பேர் முற்பட்ட பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர் நீதிபதி எஸ்.ரவீந்திர பட், சட்டம் பாரபட்சமானது மற்றும் அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாக தெரிவித்தார். தலைமை நீதிபதி, நீதிபதி எஸ்.ரவீந்திர பட் கருத்துடன் உடன்பட்டார்.
இதையும் வாசிக்க: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு இடைக்காலத் தடை... உயர்நீதிமன்றம்
இந்நிலையில், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி, திமுக, விசிக, அகில இந்திய சமூக நீதி பேரவை உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் மே 9ம் தேதி முதல் தொடங்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Reservation, Supreme court, Supreme Court Cheif Justice