முகப்பு /செய்தி /இந்தியா / யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடிப்பு- காய்கறி கடையில் மாற்றிய நபர் ஆந்திராவில் கைது

யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடிப்பு- காய்கறி கடையில் மாற்றிய நபர் ஆந்திராவில் கைது

காட்சிப் படம்

காட்சிப் படம்

கள்ள நோட்டுகள் அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கலர் பிரிண்டர், மை பாட்டில்கள், நக பாலிஷ் ஆகிவற்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

  • Last Updated :
  • Chittoor |

சிம்பிள் டெக்னாலஜி மூலம் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, 8,200 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கே கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவர் யூடியூப் ( youtube) மூலம் கள்ள நோட்டு அச்சிடுவதை பார்த்து அதே போல் செய்து பணம் சம்பாதிக்க திட்டமிட்டார். இதற்காக, கலர் பிரிண்டர், ஸ்கேனர் ஆகியவற்றை பெங்களூரில் இருந்து வாங்கி வந்த கோபால் ஒரிஜினல் நோட்டுக்களை ஸ்கேன் செய்து அதன் மூலம் கள்ள நோட்டுகளை தயார் செய்தார்.

பின்னர் அவற்றை கடந்த 15 நாட்களாக மதன பள்ளியில் உள்ள சந்தைக்கு எடுத்து சென்று காய்கறி வாங்குவது போல் நடித்து மாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று மீண்டும் மதனப்பள்ளி சந்தையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற கோபாலை வியாபாரிகள் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.

கோபாலை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 500, 200, 100 ஆகிய மதிப்பு கொண்ட கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கோபாலை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையின் போது யூடியூபைப் பார்த்து கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டதாக தெரிவித்தார்.

இதையும் வாசிக்க2000 ரூபாய் நோட்டு விவகாரம்: உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இதோ...

top videos

    கோபாலிடமிருந்து 12,000 ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள், 5 நூறு ரூபாய் கள்ள நோட்டுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் கள்ள நோட்டுகள் அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கலர் பிரிண்டர், மை பாட்டில்கள், நக பாலிஷ் ஆகிவற்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    First published:

    Tags: Crime News