முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வேட்புமனுதாக்கல்!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வேட்புமனுதாக்கல்!

கர்நாடக முதலமைச்சர் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை

கர்நாடக முதலமைச்சர் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை

Karnataka Election 2023 | கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக ஷிகாவ்ன் தொகுதியில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வேட்புமனுதாக்கல் செய்தார்.

  • Last Updated :
  • Karnataka, India

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்றத்துக்கு ஒரே கட்டமாக வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல்கட்சியினர் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆளும் பாஜகவில் முதல்கட்டமாக 189 வேட்பாளர்களின் பட்டியலும், இரண்டாம் கட்டமாக 23 வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் காங்கிரஸ் சார்பில் இரண்டு கட்டங்களாக 166 வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்றைக்குள் வெளியிடாவிட்டால்..." - ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கை

இந்த இரண்டு கட்சிகள் இடையே பிரதான போட்டி நிலவுகிறது. இதேபோல் மதசார்பற்ற ஜனதாதளம் 2 கட்டங்களாக 142 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் கடந்த 13ம் தேதி தொடங்கியது.

வரும் 20ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்த சூழலில் கர்நாடக முதலமைச்சரான பசவராஜ் பொம்மை ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஷிகாகான்  தொகுதியில் தனது வேட்புமனுக்களை தாக்கல் செய்தார்.

First published:

Tags: BJP, Karnataka Election 2023