அரசு அதிகாரிகள் தங்கள் தேவைக்காக அதிகாரங்களை பல விதமாக துஷ்பிரயோகம் செய்யும் சம்பங்கள் நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படித்தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு அரசு அதிகாரி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அங்குள்ள கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதியின் உணவுத்துறையில் ஆய்வாளராக பொறுப்பு வகித்தவர் ராஜேஷ் விஸ்வாஸ்.
இவர் கடந்த திங்கள் கிழமை விடுமுறை எடுத்து அருகே கேர்கட்டா என்ற நீர்தேக்கத்திற்கு சுற்றி பார்க்க சென்றுள்ளார். அங்கு நீர் தேக்கத்தை பார்த்த ஆர்வத்தில் தனது ஸ்மார்ட் போனில் செல்பி எடுக்கத் தொடங்கியுள்ளார். அப்போது ராஜேஷின் செல்போன் நீர் தேக்கத்திற்குள் விழுந்துள்ளது.
தனது ஒரு லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட்போன் தண்ணீருக்குள் விழுந்ததை அடுத்து பதறிப்போன அவர், அங்கிருந்தவர்களை பிடித்து தேடித் தரக் கூறியுள்ளார். 15 அடி ஆழ நீர்தேக்கத்திற்குள் விழுந்த போனை அங்கிருந்தவர்கள் தேடி பார்க்க முயற்சித்தனர். இருப்பினும் அது பலனளிக்கவில்லை.
அதன்பின்னர், அதிகாரி செய்த காரியம் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுதியுள்ளது. அந்த அதிகாரி நீர்தேக்கத்தில் உள்ள நீரை எல்லாம் வெளியேற்றி தனது செல்போனை கண்டுபிடித்து எடுத்துக்கொள்ளாலம் என முடிவெடுத்தார். இதற்காக இரண்டு 30HP மோட்டார்களை வரவழைத்து தொடர்ந்து மூன்று நாள்கள் அவற்றை ஓட வைத்து 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றியுள்ளார்.
இதையும் படிங்க: பார்கிங் பகுதியில் தூங்கிய குழந்தை... கார் மோதி பலியான சோக சம்பவம்...
திங்கள்கிழமை மாலை தொடங்கி வியாழக்கிழமை வரை இது நடந்துகொண்டிருந்த நிலையில், அதற்குள்ளாக நீர் மேலான்மை அதிகாரிகளின் கவனத்திற்கு சென்று இந்த செயலை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதற்குள்ளாக நீர் மட்டம் வெறும் 6 அடியாக குறைந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ரமன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
दाऊ @bhupeshbaghel की तानाशाही में अधिकारी प्रदेश को पुश्तैनी जागीर समझ बैठे हैं।
आज भीषण गर्मी में लोग टैंकरों के भरोसे हैं, पीने तक के पानी की व्यवस्था नहीं है। वहीं अधिकारी अपने मोबाईल के लिए लगभग 21 लाख लीटर पानी बहा रहे हैं इतने में डेढ़ हजार एकड़ खेत की सिंचाई हो सकती थी। pic.twitter.com/lw9F4xdzY9
— Dr Raman Singh (@drramansingh) May 26, 2023
"அதிகாரிகள் பொது சொத்துக்களை தங்கள் மூதாதையர்களின் சொத்து போல சர்வாதிகாரத்துடன் கையாள்கிறார்கள். வெளியேற்றப்பட்ட நீரைக் கொண்டு 1,500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்யலாம். பூபேஷ் பாகேலின் காங்கிரஸ் அரசு மோசமாக ஆட்சி நடத்துகிறது" என ட்விட்டரில் கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், சர்ச்சை அதிகாரி ராஜேஷை உடனடியாக சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுக்லா உத்தரவிட்டுள்ளார். மேலும், விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அமைச்சர் அமராஜித் பகத் உறுதி அளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chhattisgarh, Government officers