முகப்பு /செய்தி /இந்தியா / சென்னை To பெங்களூரு ரயில் தடம் புரண்டு விபத்து... பயணிகள் அதிர்ச்சி..!

சென்னை To பெங்களூரு ரயில் தடம் புரண்டு விபத்து... பயணிகள் அதிர்ச்சி..!

விபத்துக்குள்ளான ரயில்

விபத்துக்குள்ளான ரயில்

train accident | ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். 

  • Last Updated :
  • Bangalore [Bangalore], India

சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற டபுள் டக்கர் ரயில் குப்பம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.25 மணிக்கு டபுள் டக்கர் ரயில் பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையம் புறப்பட்டு சென்றது. குப்பம் ரயில் நிலையத்தை கடந்து காலை 11.15 மணியளவில் பங்காருபேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் இருந்து 2 ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அந்த பெட்டிகளில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

top videos

    இதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் அவ்வழியாக செல்லும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Accident, Bangalore, Train