முகப்பு /செய்தி /இந்தியா / இந்தியாவில் வசிக்க அதிகம் செலவாகும் நகரங்கள்... சென்னைக்கு எந்த இடம் தெரியுமா?

இந்தியாவில் வசிக்க அதிகம் செலவாகும் நகரங்கள்... சென்னைக்கு எந்த இடம் தெரியுமா?

சென்னை

சென்னை

Cost of Living City Ranking 2023 | உலகளவில் சென்னை 184 வது இடத்திலும் உள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • international, Indiaamericaamericaamericaamericaamericaamerica

இந்தியாவில் வசிப்பதற்கு அதிகம் செலவாகும் நகரங்களில், மும்பை தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. சென்னை மூன்றாவது இடத்தில் உள்ளது.

உலக அளவில் வசிப்பதற்கு அதிக செலவாகும் நகரங்களின் பட்டியலை அமெரிக்காவை சேர்ந்த மெர்சர் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்காக, 5 கண்டங்களைச் சேர்ந்த 227 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சீனாவின் ஹாங்காங் நகரம் முதலிடத்தில் உள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியாவில் பொருளாதார தலைநகரமான மும்பை 147-வது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, தலைநகர் டெல்லி 169 வது இடத்திலும், சென்னை 184 வது இடத்திலும் உள்ளன.

பெங்களூரு 189வது இடத்திலும், ஐதராபாத் 202 வது இடத்திலும், கொல்கத்தா 211-வது இடத்திலும் உள்ளன. மேலும், இடம், வீடு, போக்குவரத்து, உணவு, ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக அதிகம் செலவிடப்படும் நகரங்களில், ஹாங்காங், சிங்கப்பூர், சூரிச் நகரங்கள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

மேலும் படிக்க... Video | `பக்கத்தில் வந்து நில்லுங்க' என்று ஓபிஎஸ்-ஸை அழைத்த டிடிவி... வைத்திலிங்கம் மகன் திருமணத்தில் நெருக்கம்...

இந்தியாவை பொறுத்தவரை மும்பை முதலிடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக சென்னை, ஐதராபாத், கொல்கத்தா, புனே ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

மேலும், மும்பை நகரை விட எஞ்சிய நகரங்களில் ஆகும் செலவு 50 சதவீதத்துக்கும் குறைவு என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

First published:

Tags: Chennai, India, Money, Mumbai