முகப்பு /செய்தி /இந்தியா / திடீரென சரிந்து விழுந்து உடைந்த தேர்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..

திடீரென சரிந்து விழுந்து உடைந்த தேர்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..

திடீரென சரிந்து விழுந்து உடைந்த தேர்

திடீரென சரிந்து விழுந்து உடைந்த தேர்

Chariot suddenly collapsed and broke in Andhra Pradesh | ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் தேர் சரிந்து விழுந்து உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Andhra Pradesh, India

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பென்னோபிலம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பிரமாண்டமான தேர் சரிந்து விழுந்து உடைந்தது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் இன்னும் 12 நாட்களில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ நாட்களில் ​​லட்சுமி நரசிம்ம சுவாமி பலவேறு வாகங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். அப்போது ஒரு நாள் தேரோட்டமும் நடைபெறும். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக கோயிலில் திருட்டு தேரை மராமத்து செய்யும் பணிகள் நடை பெற்று வந்தன.

இந்நிலையில், நேற்று திடீரென தேர் சரிந்து விழுந்து உடைந்தது. மிகவும் பழமையான தேர் ஆகையால் அதில் உள்ள மர பாகங்கள் வலுவிழந்த காரணத்தால் தேர் சரிந்து விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : புஷ்பராஜ் - திருப்பதி

top videos
    First published:

    Tags: Andhra Pradesh, India, Local News