முகப்பு /செய்தி /இந்தியா / வடமாநிலங்களில் தொடங்கியது சைத்ர நவராத்திரி விழா.. பக்தர்கள் வழிபாடு!

வடமாநிலங்களில் தொடங்கியது சைத்ர நவராத்திரி விழா.. பக்தர்கள் வழிபாடு!

சைத்ர நவராத்திரி விழா

சைத்ர நவராத்திரி விழா

Chaitra Navratri 2023 | சைத்ர நவராத்திரி விழா இன்று முதல் கோலாகலமாக தொடங்கி மார்ச் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

  • Last Updated :
  • Mumbai, India

இந்தியாவில் வடமாநிலங்களில் சைத்ர நவராத்திரியின் முதல் நாளையொட்டி பக்தர்கள் கோயில்களில் வழிபட்டனர். வசந்த நவராத்திரி என்று பெயரில் வழிபாடுகள் வரும் 30ஆம் தேதி வரை நடக்க இருக்கின்றன. பல மாநிலங்களில் துர்கா தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. டெல்லி ஜந்தேவாலான் கோயிலில் துர்கா தேவியை பக்தர்கள் வணங்கினர்.

இதேபோல் டெல்லி சத்தார்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக குவிந்து வழிபட்டனர். மும்பையில் உள்ள மும்பா தேவி கோயிலில் சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. தானே மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ அம்பே மாதா கோயிலில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே வழிபட்டார்.

top videos

    அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள காமக்யா கோயிலிலும் சிறப்புவழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

    First published:

    Tags: Mumbai, Navarathri