முகப்பு /செய்தி /இந்தியா / ‘கொரோனா அதிகரிப்பு; பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்’ – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

‘கொரோனா அதிகரிப்பு; பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்’ – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

Corona Virus | அதிக கூட்ட நெரிசலின்போது மக்கள் மாஸ்க் அணிய தவறக் கூடாது. அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளையும், விரைவாக ரிசல்ட் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா (26.4 சதவீதம்). மகாராஷ்டிரா 21.7 சதவீதம், குஜராத் 13.9 சதவீதம், கர்நாடகா 8.6 சதவீதம், தமிழ்நாடு 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் உயிரிழப்பு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறைவாக இருக்கிறது. இதற்கு கொரோனா தடுப்பூசியை பரவலாக்கியதுதான் முக்கிய காரணம் ஆகும்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை மாநில அரசுகள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். மூச்சுத் திணறல் தொடர்புடைய இன்ஃபுளுயன்சா போன்ற நோய்கள் பரவுவதை மாநில அரசுகள் கவனமாகப் பார்க்க வேண்டும். கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்சா பாதிப்புகள் ஏறக்குறைய ஒரே மாதிரியான அறிகுறிகளை கொண்டிருக்கும். தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல், மாஸ்க் அணிதல், கைகளை சோப் உபயோகித்து கழுவுதல் போன்ற அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொண்டால் இதனை இன்னமும் கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக பொது இடங்களில் துப்புவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

கொரோனா பாதிப்புகள் தொடர்பாக ஏற்கனவே அனைத்து மாநில அரசுகளுக்கும் வழிகாட்டு முறைகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இன்ஃப்ளூயன்சா போன்ற நோய்களின் பரவலை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. இவை போன்ற நோய்கள் மற்றும் கொரோனா பரவுதலை தடுக்க தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். அதிக கூட்ட நெரிசலின்போது மக்கள் மாஸ்க் அணிய தவறக் கூடாது.

தும்மும்போது கர்சீபை பயன்படுத்தி தும்ம வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது. அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளையும், விரைவாக ரிசல்ட் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மூச்சுத் திணறல் நோயாளிகளை நேரடியாக தொடர்புகொள்வதை தவிர்க்க வேண்டும்.

கள்ளக் காதலனுக்காக இரு குழந்தைகளைக் கொன்று கால்வாயில் வீசிய தாய்.. 6 பேர் கைது

top videos

    முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் உருளைகள், உள்ளிட்டவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: CoronaVirus