முகப்பு /செய்தி /இந்தியா / வாகன ஓட்டிகளே... இனி டோல்கேட்டுகளில் காத்திருக்க தேவையில்லை... வருகிறது புதிய நடைமுறை..!

வாகன ஓட்டிகளே... இனி டோல்கேட்டுகளில் காத்திருக்க தேவையில்லை... வருகிறது புதிய நடைமுறை..!

சுங்கச் சாவடி

சுங்கச் சாவடி

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம் செலுத்தும் வகையில், புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சராசரியாக 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதில், வாகனங்களுக்கு ஏற்ப, நிர்ணயிக்கப்பட்ட தொகை வசூலிக்கப்படும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.

கட்டணம் செலுத்த Fastag முறை நடைமுறையில் உள்ளபோதும், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதும், அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையும் தொடர்ந்து வருகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில், புதிய நடைமுறையை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது.

இதற்காக, தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ச்சியாக கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இதன் மூலம், தானியங்கி முறையில் வாகனங்களின் நம்பர் பிளேட்களை ஸ்கேன் செய்து, பயணம் செய்த தொலைவு கணக்கிடப்படவுள்ளது.

Also Read : 36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த LVM3-M3 ராக்கெட்..!

பின்னர், சாலையில் பயணம் செய்ததற்காகத் தொகை மட்டும் Fastag மூலம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக, 29 கிலோ மீட்டர் நீளம் கொண்ட டெல்லி - குருகிராம் விரைவுச் சாலையில், இன்னும் 6 மாதத்திற்குள் இந்த புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

top videos
    First published:

    Tags: Fastag, Toll gate, Toll Plaza